
திராவிட கட்சிகளும் அவர்கள் கீழ் இயங்கும் அத்தனை தமிழக 'நடுநிலை!?’ ஊடகங்களும், ’ஸோ கால்ட்’ சமூக ஆர்வலர்களும் தலைவர் ரஜினியிடம் எதிர்ப்பார்ப்பது,
1) ரஜினி அமைதியாக இருக்க வேண்டும் - அப்போதுதான் ரஜினி மெளனம் காக்கிறார், அவர் எதுக்கும் கருத்து சொல்லமாட்டார், ரஜினி மெளனம் காவிகளுக்கு ஆதரவாக உள்ளது என்று சொல்லி அவர்கள் தங்கள் இருப்பை ஸ்திரப்படுத்தி கொள்ள முடியும்.
2) இல்லையெனில் ரஜினி திராவிட கட்சிகளுக்கு ஆதரவாக பேச வேண்டும், அதாவது அவர்கள் விரும்பும்படி, அவர்கள் மனம் குளிரும்படி, சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், தமிழக முக்கால்வாசி ஊடக, சமூக ஆர்வலர்கள், இத்தியாதி இத்தியாதிகள் போல் திராவிட கட்சிகளுக்கு சொம்பு சுமக்க வேண்டும். இல்லாவிடில் ரஜினிக்கு காவி சாயம் பூசுவோம், சங்கி என்போம், பாஜக ‘பி-டீம்’ முத்திரை குத்துவோம் என்று கங்கணம் கட்டி இறங்கியுள்ளனர் கழகத்து கலகக்காரர்கள்.
ஏதோ மோடியின் பாஜக அரசு தமிழகத்துக்கு மட்டும் எதிரி போலவும், சிறுபான்மையினருக்கு தீங்கு இழைப்பவர்கள் போலவும் சித்தரித்து ஒரு மாய பிம்பம் உருவாக்கி விட்டனர் இந்த திராவிட கும்பல். அதற்கு தமிழகம் இன்று வரை சிக்கி சின்னாபின்னமாகும் சோகத்தை என்னவென்று சொல்வது...
ஆனால் நீங்கள் எதிர்ப்பார்ப்பது தலைவர் ரஜினியிடம் நடக்காது. அவர் உண்மையின் பக்கம் மட்டுமே நிற்பார். அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டாலும் சரி, தோல்வி வரினும் சரி.
மக்களுக்கு எது நல்லதோ அதை உரக்க சொல்வார். தன் நிலைப்பாட்டில் உறுதியாய் நிற்பார். இது திராவிட கழகங்களை கதிகலங்கத்தான் செய்யும்! சகித்து கொள்ளுங்கள். வேறுவழி இல்லை.
நல்லது யார் செய்தாலும், அது பாஜக மோடியோ, காங்கிரஸ் ராகுலோ, அல்லது வேறு யாராக இருப்பினும் மனம் திறந்து பாராட்டி, ஆதரவு கரம் நீட்டுபவர் தலைவர் மட்டுமே!
இது அவரை பிடிக்காத எதிரிக்கும், குழிப்பறித்த துரோகிக்கும் கூட தெரிந்த உண்மை.
மேலும், இந்த பகைமை உணர்வை மனதில் உரமிட்டு பெருக்காமல், அதை கிள்ளி எறிந்துவிட்டு, அந்த எதிரிக்கும் துரோகிக்கும் ஆபத்பாந்தவனாய் இதுவரை நின்றவரும், இனியும் நிற்க ஓடி வருபவரும் அவர் - தலைவர் மட்டுமே!
நவீன காலமான தற்போதைய சூழலில் கூட மக்களை சிந்திக்கவிடாமல் அவர்களை ஆட்டுமந்தை போல் மேய்ப்பதில் திராவிட கட்சிகளுக்கு பெரும் பங்கு உண்டு. அப்படி ஒரு வித்தையை சரிவர கையாளும் வித்தகர்களை பாராட்டியே ஆக வேண்டும்!
ஆனால் அந்த வித்தை இனி செல்லுபடி ஆகாது.
தமிழக மக்களின் முகமாக, அவர்கள் எண்ண ஓட்டத்தை சரிவர புரிந்து கொண்டவராய், திராவிட கட்சிகளின் அனைத்து அபத்தங்களும் கோமாளித்தனங்களும் பார்த்து சலித்துப்போன தமிழர்களின் ஏக நம்பிக்கையாய் ரஜினி எழுகிறார்.
அவரை பிடிக்காதவருக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். காலம் உணர்த்தி கொண்டேயிருக்கிறது, தமிழகத்திற்கு அவரின் தேவையை, முக்கியத்துவத்தை!
அதை உணருங்கள். 🙏