Wednesday, December 14, 2022
Tuesday, December 13, 2022
Monday, December 12, 2022
ரஜினியும் நானும்

குடும்பமாக நாங்கள் சென்று
திரையில் பார்த்த முகம்!
சிறுவனாக நான் திரையில்
ரசித்த முதல் முகம்!
முண்டியடிக்கும் மக்கள் கூட்டம்!
பெரிதாய் மரியாதையுடனும்
சிறிதாய் முறுக்கிக்கொண்டும்
பரவிக்கிடக்கும் ரசிகர் பட்டாளம்!
என்ன பந்தமென்று இன்றும் வியப்பேன்
இந்த கருப்பு மனிதன் மீது
அவ்வளவு அன்பும் மரியாதையும்!
காதலை கூட கடந்துவிட்டேன்
இக்காந்தத்தை விட்டு அகல முடியவில்லை!
அவரை காணும் நொடிகள் எல்லாம்
மனதுள் மகிழ்ச்சி பொங்கும்!
துவண்டு போன தருணங்களில்
தூக்கி விட்ட ஆசான்!
ஏதோ ஓர் வடிவில் வருவார்
”ஏக்கம் ஏனடா…?
எழுந்து ஓடு!”
என்று உத்வேகம் கூட்டியவர்
மாயக்காரர் மந்திரக்காரர்
என்று அவரை அந்நியப்படுத்த மாட்டேன்
மிகப்பெரிய கலைஞன், தலைவன்
என்று அவரைப்பற்றி அளவுக்கடந்த
பூசி மெழுகள்களும் தேவையில்லை
திரையிலும் தரையிலும்
ஒருப்போல நிலைத்திருக்கும்
ஓர் மனிதனாய் எனை ஈர்த்தவர்!
பெரும் புகழ், செல்வம் போன்ற
மாயைகளில் வீழாது நடக்க
நல்வழிக்காட்டிய பேரொளி!
வெள்ளை உடை அணிந்த
வெள்ளை உள்ளக்காரர்!
பிள்ளைமனம் கொண்ட
பாசத்தலைவன்!
’வெறும் சினிமாக்காரன் தானே!’
‘உனக்கு என்ன செஞ்சாரு ரஜினி?’
‘ச்சீ…கருப்பு கலரு…!’
‘அவரை மாதிரி நடிக்கத்தெரியல!’
’இவரை மாதிரி உருகத்தெரியல…!’
’மருகத்தெரியல…!’
என்று துச்சமாய் பேசும்
வயிற்றெரிச்சல் பேர்வழிகளுக்கு
அவர் பாணியில் சிரிப்பை மட்டும்
பதிலாய் கொடுத்து கடந்திருக்கிறேன்
என்னுள் மட்டுமல்ல…
ரஜினி ரசிகன் என்பவன்
அவரை தன்னுள்
கிரகித்துக்கொண்டுதான் வாழ்பவன்!
தாழ்ந்திருப்பான்
தாழ்ந்தே கிடக்க மாட்டான்!
விட்டுக்கொடுப்பான்
கெட்டுப்போக மாட்டான்!
மனதுள் வஞ்சமிருக்காது
வஞ்சிப்போரை பழித்தீர்க்க எண்ணாது
மெளனியாகவே கடந்து செல்வான்!
தாய் தந்தையரை தாண்டி யோசனை இல்லை!
அவனுக்கு இறைவனை
உதாசினப்படுத்தும் பாங்கும் இல்லை!
’தான்! எனக்கு! என்! நான்!’ எனும்
சுயநல சிக்குகளில் சிக்காது
ஆகாயம் போல் வாழ்பவன்!
திரையிலும் சரி!
தரையிலும் சரி!
தன் சொல்லாலும்
செயலாலும்
ஒருப்போல வாழும் குரு!
அரசியல் களம் காணாதது குறித்து
எதிர்திசை வசை பாடி மகிழ்ந்தாலும்,
அரவணைத்த தமிழ்நாட்டின் நன்மைக்காக
எல்லாம் சகித்து கொண்ட உத்தமர்!
’அரசியலில் ஆன்மீகம்’
எனும் புத்தொளி பரப்ப வந்த ஞானி!
பதவி மோகம் அறவே அற்றெறிந்த துறவி!
இன்று மட்டுமல்ல
என்றென்றும் சூப்பர் ஸ்டார்
அவர் ஒருவரே!
அளவில்லா அன்புக்கொட்டும்
ரசிகர் பட்டாளமும் - என்றும்
மதிப்பும் மரியாதையும் குன்றாத
மக்கள் மனங்களும்
எதிரிகளின் அடங்கா பகையும்
துரோகிகளின் தீரா சூழ்ச்சிகளும் என்று
ஒரு சேர கிடைக்கப்பெற்ற வரம்
இவருக்கு மட்டுமே!
உலகில் ஒரேயொரு முறை நடக்கும்
அதிசயம் அற்புதம்
– ரஜினி
அவரைப்போல...
அவரைமிஞ்ச…
நீ முதலில்
மனதளவில் வளர வேண்டும்
– கவனி!
இவண்...
பாலசுப்ரமணியம்
ரஜினி ரசிகன்
Saturday, December 10, 2022
Friday, December 9, 2022
Subscribe to:
Posts (Atom)



