Sunday, August 2, 2009

மனதிலும் மனத்திலும் நிலைத்தவை....

ஞாயிற்று கிழமையெல்லாம்
பட்டையை கிளப்பும் தினமாகும்! - என்
ஞாபகத்தில் நிலைத்திருக்கிறது அந்நினைவுகள்....
பட்டை கிராம்பும் இணைந்து
எங்கள் தெருவெங்கும்
மதிய நேரமதை
மதி மறக்க செய்யும் நேரமாக்கும்!
ஏழை வீடாயினும்
மாட மாளிகை வீடாயினும்
மாறாத பழக்கமொன்று
எங்கும் படர்ந்திருக்கிறது.......

வீதியெங்கும்
கறி சோற்றின் மணம் கமழும்
எங்கள் மனதை அது அள்ளும்....

-பாலா :-)

1 comment: