Sunday, August 16, 2009

Victory, The Strongest Feel

வெற்றி-
இவ்வுணர்வை ருசிக்க
இவ்வுலகில் மலரும் மலர்கள் பல...
இருப்பினும் இயன்றும் முயன்றும்
இதை நுகர்ந்துணரும் உயிர்கள் சில...

தூற்றுதல்-
கொடுவலையாம் இவன்!
அதனுள் தூண்டில்மீன்களாய்
கொடுமையில் வாடுவோரிங்கு பலர்!
அதிலிருந்து மீண்டு வருவோரிங்கு சிலர்...

இங்ஙனம்-
இதயமதில் வெற்றியினை
இலக்காக கொண்டு
பயணிக்கும் மனிதனின்
பாதையில் தூற்றுதலே பரிசாய் கிடைக்கும்!

இருப்பினும்-
தன்னம்பிக்கையெனும் தோழனை
தோள்மீது கொண்டு பயணிக்கையில்- சிறு
துரும்பும் வெற்றிக்கான படிக்கட்டாக மாறும்!

Victory-
The feeling which every human want to cherish in his life
But only few strive hard to taste that inherent sense!

-Bala

1 comment:

  1. as long as it does not get into anyones head... good!

    ReplyDelete