இவ்வுலகமெனும்
கொடிய நரகமதில்
ஜீவித்திருக்க முயல்கிறது... அது.
அடிகளும் ரணங்களும்
அதன் மென்மையினை பரிசோதிக்கின்றன...
இருப்பினும் அதனை ஓர்
பொக்கிஷமென பாதுக்காத்தல் அவசியம்,
பாதுக்காத்தும் வருகிறேன்.
வலியினை நான் ஏற்றுக்கொள்கிறேன்
என்னை விட்டு போகாதே....
- என் குழந்தை மனமே...
No comments:
Post a Comment