
இன்று காலை 10 மணியளவில் எந்திரன் பட பாடல் குறுந்தகடு வாங்கினேன்.
ஆர். எஸ். புரம் தேநீரகம் ஒன்றில் நுழைந்து அந்த குறுந்தகடு பொதியினை பிரித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
அங்கே வந்த சில முதியவர் கூட்டம் நான் பார்த்து கொண்டிருந்த ரஜினி புகைப்படங்களை அவர்கள் கேட்டு வாங்கி பார்த்தனர்.
"இவரோட நல்லவனுக்கு நல்லவன் படம் எனக்கு புடிச்ச படம் தம்பி. மிச்ச படங்களும் புடிக்கும். சினிமால நடிக்கிற மாதிரியே நிஜ வாழ்க்கையிலும் நல்லவரா இருக்கார். என் வீட்டுல எல்லாரும் சேந்து படத்துக்கு போறோம்னா, அது ரஜினி படமாத்தான் இருக்கும்! சினிமா ஒலகத்தில இப்பிடி ஒரு மனுசன பாக்குறது கஷ்டம். வாழ்ந்தா இந்த மனுசன் மாதிரி வாழனும்!"
என்றார் ஒரு பெரியவர்.

மாயம் இல்லை, மந்திரமும் இல்லை, 'லக்' உடன் ஜெயித்தவர் இல்லை, 'ஸ்டைல்' மட்டுமே கொண்டு நிலைத்தவரும் இல்லை
ரஜினி - நல்ல மனிதர்.
இத்தனை கோடி பேர்களின் இதயத்தினுள் ஜொலிக்கும் வல்லமை இங்கு வேரு யாருக்கும் கிடைக்கப் பெறாத வரம்.
அது கிடைத்தும் தரையில் கால் பதித்து நடக்கும் ரஜினி வாழ்க!
No comments:
Post a Comment