Saturday, July 31, 2010

நண்பர்கள் தினத்திற்காக... - On Behalf of Friendship Day

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

எதிரி என்று யாரும் இல்லை.
நண்பர்கள் மட்டும் இருந்தால்
இவ்வுலகில் இல்லை ஓர் எல்லை!

உதவா உலோகம்
என்னை
வடித்தவன் ஓர் நண்பன்.
உயிரில்லா பாறை
என்னை
செதுக்கியவனும் அதே நண்பன்.

ஊக்கமளித்தான்,
உடன் நடந்தான்,
உதறி தள்ளா என்
மற்றொரு தாயானான்!

உன்னை பெற்றதனால்
உன் தாய்
உவகை கொண்டிருக்கலாம்...
நான் பேருவகை கொள்கிறேன்!
நீ எனக்கு நண்பனாய் கிடைத்தாயே... அதற்கு!!

சிறு தென்றல் வருடினாலும்
பெரும் புயலே வந்தழித்தாலும்
சாயாதிருப்பான்...
என் நண்பன் சாய்.
என் உயிர் உள்ளவரை
உன்னை மறவா இதயம் வேண்டுமடா!





























































For My Dear Friend Sai,
Who is now at present studying at London
The only best friend whom I cherish in my life
Love You Sai.
I terribly miss you!

No comments:

Post a Comment