நித்தம் தன்னைச் செதுக்கியவன்;
நீங்கா துன்பமதில் அடைப்பட்டிருப்பினும்
நீள் வானத்தை ரசிக்க மறக்காதவன்;
நிலம் புலம் வழி பிரிவினை வெறுத்தவன்;
தன்னுள் கண்டான் நல்லதோர் வீணையை...
தானே அதனை மீட்டி
தனக்கான பெருமித உணர்வில் மூழ்கவில்லை அவன்;
தானே இயங்கும் உலகிற்கும்
தாயென நின்ற பராசக்தியையும் மற்றுமுள்ள
தானிய தாவிரங்களையும் பாடினான்;
அவன்! இவன்! என்ற சொற்கள்
அகந்தையினால் எழுந்தது அல்ல;
அவன்... இப்பாட்டுடை தலைவன்!
அந்நியன் அல்ல;
அடுத்த வீட்டினுள் இருப்பவன் அல்ல;
அன்றாடம் என் மனதினுள் வாழ்பவன்!
அ... ஆ... என கற்க ஆரம்பித்த நாள் முதல்
அனுதினம் பாட நூலினில்
அறுபட முடியாத நூலென திகழ்பவன்!
ஆழபெருங்கடல் மீனினத்திற்குத் தோழனே!
ஆடிப்பாடி நீந்தி மகிழத் தந்துள்ளதே இடம்!!
ஆவல் அதிகம் என்னுள் உண்டாக்கியவன் இவனே…
ஆணித்தரமான எண்ணங்கள் பல என்னுள் கொணர்ந்தவனும் இவனே…
ஆகையினாலே இவன் எமக்கு உற்ற தோழனாவான்!!
சிந்தை கெட்டா
விந்தை சாதனை எதுவும் புரியவில்லை இவன்
சிறப்பான
சிந்தைக்கெட்ட கூடிய
விழிப்பூட்டும் கவிதைகளையே இயற்றினான்!
விரல் நுனி கொண்ட பேனாவால் இவனும் சாதனையாளனே!
கண்ணனைப் பாடினான் - உடன்
கர்த்தரையும் துதித்தான்
கடவுளென்று கூறி இவனை வேற்றுமைக்குள்ளாக்க வேண்டாம்
கனிமவள அதிசயங்கள் பலதுமுள்ள இவ்வுலகில்
கணக்கில் எடுக்கப்படாத ஓர் அதிசயம் இவன்!
இவனை மகாகவி என்றழைப்பர்.
- -பாலா
No comments:
Post a Comment