Sunday, August 29, 2010

மழை - தேநீர் - குளிர் - காதல் - கூடல்

மழையினைப் பற்றி

ான் எழுதியதெல்லாம் தேன் அடி;

ானே அவளை இன்று வெறுத்தேனடி!

மறைக்காமல் காரணத்தையும் கூறுகிறேன்... கேளடி!


மழ அவள் மட்டும் வருவதோடு நில்லாமல்

மயங்கி உறங்கிட செய்யும் குளிர்த் தோழியுடன் வந்தாள்

என் மங்கை அவள் கண்கள்

எழ மறுத்தது - அவள் உதடுகளும் சிவந்திருந்தது!


என்னவள் மூச்சுக்காற்றினில் நெகிழ்ந்திருக்கும்

தலையனை அருகில் அமர்ந்தேன்.

என்னவள் சோம்பலை விலக்கத் தேநீருடன்...

ிரை பின் நின்ற கடவுளை காண

அவாவுடன் நின்ற பக்தனை போலே...


ெவ்விதழ்கள் மெல்ல விரித்த

ெங்காந்தள் மலரெனப் பூத்திருந்தாள்;

என் முகமெங்கும் புன்னகைப் பூ

என்னைக் கண்ட அவள் கண்களிலோ வெட்கப் பூ!

ுளிரென்ற தீயினை அணையாது

அணைத்தே அத்தீயினை மேலும் வளர்த்தோம்...


- பாலா

No comments:

Post a Comment