Wednesday, September 15, 2010

பிரிவு

பிரிவு -

அதன் ஆனந்த தாண்டவம் காண்கிறேன்.

உயிரோடு கலந்தவள்

என் உலகமாய் நிலைத்திருப்பவள்

அவளை பிரியும் காலம் வருகிறது

இலையுதிர் காலத்தில்

மரத்தை விட்டு

நிலம் அடையும்

இலையினை போலானேன்!

அவள்,

அவள் புன்னகை,

பிடிவாதம்,

மழலைச் சிரிப்பு,

மகிழ்ச்சி களிப்பு,

அழுகை,

அரவணைப்பு,

அழகிய இதயம்,

விழி சிரிக்க வைக்கும்

அலைபேசி கொஞ்சல்கள்

விடிந்தும் தீரா

அனுதின கெஞ்சல்கள்!

இத்தனையும்

இழந்து செல்கிறேன்

இனியவள் உன் கரம் பற்ற! - வேண்டுமெனில்

இனி கண்டங்கள் பலவும் கடப்பேனடி!!

உனக்காக பெண்ணே!

உன் விழியினை என்றும் நான் கண்டு மகிழ...

என் குடில் அதிலே

எழில்மகள் நீ விளக்கேற்ற!

- பி.சி.பாலசுப்பிரமணியம்

No comments:

Post a Comment