Thursday, October 7, 2010

உணர்!

அவரை காண முற்படுகின்றனர்

முரண்பாடுகளே எதிரில்!


மூடனே!

உணர்!

உணர்தலிலேயே அவரை அடைய முடியும்


மகிழ்ச்சி மிதப்பில் அவரை மறக்கின்றனர்

துயர தத்தளிப்பில் அவரையே நினைந்து சபிக்கின்றனர்

'வாழ்க்கையென்பது ரோஜா பூவிதழ்கள் பரப்பிய மெத்தை அல்ல!'

எங்கோ கேட்ட சொல்!

நீயும் அதற்கு விதிவிலக்கல்ல


உனது நற்செயல்களுக்கு

உன் முகவரியை முன் நிறுத்தினாய் - உன்

தீயவைக்கோ அவர் முகத்தில் அல்லவா

தீண்டா அசிங்கத்தை பூசினாய்?


எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டிற்குள்

அடக்க முயன்ற மனிதன்

அவருக்கும் ஓர் வடிவம்,

ஓர் உருவம்,

கொடுக்க முற்படுகிறான்

தன் கட்டுப்பாட்டிற்குள் அடக்க முயன்றான்

முயல்கிறான்!

இன்னும் முயல்வான்!!

முரண்பாடுகளே எதிரில்...!

... முட்டி மோதுகிறான்

தன்னை போன்றவனை

வெட்டி சாய்க்கிறான்

செந்நிற ஆற்றில் மிதக்கிறான்


வடிவத்தில் இல்லை

நீ கொடுக்கும் உருவத்திலும் இல்லை

உன்னுள் இருக்கிறார்

என்னுள்ளும் இருக்கிறார்

எல்லாமுமாய் இருக்கிறார்

நம் உள்ளம் வரை செல்லும் வல்லமை கொண்டவர்

மனிதனின் ஒரே மிகப் பெரிய தோல்வியும் வெற்றியும் அவரே!


இந்த எழுத்துக்களிலும் 'அவர்' தெரியவில்லை

ஆனால் அவரை உணரும் இதயங்களை 'அவர்' காண்கிறார்

- பி சி பாலசுப்பிரமணியம்.

No comments:

Post a Comment