ஹிட்லர் என்ற அந்த மாபெரும் மலை போன்ற பிம்பத்தை சுக்குநூறாக உடைத்தெறிந்தார் சாப்ளின்.
‘தி கிரேட் டிக்டேட்டர்’ – தைரியமான ஒரு படைப்பு! தன்னை கலைஞன் என்று கூறி கொள்பவர்கள் இத்திரைப்படத்தை கண்டிப்பாக பார்த்திடல் வேண்டும்! ஒரு படைப்பு வெறும் கல்லாக இல்லாமல் அதை ஒரு அழகிய, சிந்திக்க வைக்க கூடிய சிற்பமாக மக்களுக்கு கொடுக்கும் விதத்தில் தான் ஒரு படைப்பாளி வெல்கிறான். அதை நிருப்பித்துள்ளது இத்திரைப்படம்.
இத்திரைப்படத்தை இன்று நாம் கண்டு சிரிக்கிறோம், ரசிக்கிறோம். ஆனால் அன்று.... ஹிட்லர் உயிருடன் இருக்கும் போதே இதை படமாக்கியுள்ளார் சாப்ளின். அத்துணிவு கொண்டிருந்த அவரே கலைஞன். அவரை போன்றோரே கலைஞன். தன் மக்கள் படும் பாட்டை, தன் படைப்புகளில் படைத்திடும் போதே ஒரு கலைஞனின் பணி முழுமை பெறுகிறது.
பணம் என்ற காகிதங்கள் பல சேர்ந்து நம் முன் பூதாகரமாக இன்று வளர்ந்திருக்கிறது. அதன் முன் மனிதம் என்ன தான் செய்ய முடியம்? வலுவிழந்து பொலிவிழந்து நிற்கிறது. பணமும் வேண்டும், உடன் மனிதமும் வேண்டும். பணத்திற்கு கொடுக்கும் அதிகப்படியான முக்கியத்துவத்தை மனிதத்திற்கு கொடுப்போம். கொடுப்போம் அல்ல... கொடுத்தே ஆக வேண்டும்! இக்காலத்தில்!!!
‘தி கிரேட் டிக்டேட்டர்’ – இத்திரைப்படத்தை பார்த்திராதவர்கள் இன்றே
கண்டிப்பாக பாருங்கள். பார்த்தவர்கள்... இன்னொரு முறை பாருங்கள்! :)
To The Ardent Supporter of Unconditional Love- Dear Bishwas!
Love Chaplin!
Love The Unconditional Love!
:)
No comments:
Post a Comment