Wednesday, July 31, 2013

’மரியான்’

’மரியான்’
புதிய கதைக்களம், தேர்ந்த நடிகர்கள், சிறப்பான தொழில்நுட்பத்துடன் சமீபத்தில் வந்த அழகான ஓர் திரைப்படம்.

அன்பு, கோபம்,பரிவு, திமிர் என்று பல பாவனைகள் இப்படத்தில் அர்த்தமுள்ளதாய் பதிந்திருப்பதை உணர்கிறேன்.

ஈடு இணையற்றது தனுஷ் மற்றும் பார்வதியின் காதல்.

பிரிவிலும் காதலின் பிணைப்பு பற்றிய இரு இதயங்களின் உணர்வு பரிமாற்றம் - வர்ணனைகளுக்கு அப்பாற்ப்பட்டது.

இன்னும் அசை போட்டு கொண்டிருக்கிறேன்... ‘மரியான்’ திரைப்படத்தில் உணர்ந்த காட்சிகளை...

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் படத்தின் வனப்பு மென்மேலும் மெருகேறியுள்ளது

எல்லா உணர்வுகளும் INSTANT ஆக இருக்க முடியாது. அப்படி இருந்தாலும் அது அழகாய் இருக்காது.

சில உணர்வுகள் மெல்ல மெல்ல தான் ஊறும், அதனுள் திளைப்பதே இன்பம்.

அந்த உணர்வு மெல்ல மெல்ல தான் நடக்கும்.

மெல்லவே திளைப்போம்!

No comments:

Post a Comment