Tuesday, July 17, 2018

நகர நெரிசலுக்கு இடையே...

     நகரத்தில் சுற்றியும் வாகனங்களின் அடர்கரும்புகையும், காதுகளை கழட்டி எறிய தூண்டும் horn’இன் கூச்சலும், அணையா இரைச்சலும், முடியா அலைச்சலும், விடா அலுப்பும், வீழா வியர்ப்பும், தகிக்கும் வெப்பமும் இவைகளுக்கு இடையே வாழும் நகரவாசிகளுக்கு தெரியும்... வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்று...
     அதைவிட கடினம், இவைகளுக்கு இடையே சின்னசின்ன சந்தோஷங்களிலும் இன்பங்களிலும் திளைப்பது, திளைத்து நிதர்சன இடர்களில் இருந்து தப்பித்து கொள்வது! (An instant and needy escape from present)
உங்களில் யாராவது நகர சாலைகளில் பயணிக்கும் பொழுது, உங்களுக்கு பிடித்த பாடலை அல்லது இசையை மனதால் உச்சரித்து, உதடுகளால் முணுமுணுத்தது உண்டா?
     IPod, Mobile phones, மற்றும் இன்னபிற இசை உபகரணங்களால் இசைக்கப்பட்டு நீங்கள் பாடுவது அல்ல!
     உங்களுக்குள் எதேச்சையாக பெருக்கெடுக்கும் அந்த நிலை. நான் அத்தகைய நிலையை பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். உணர்ந்து ரசித்திருக்கிறேன். நிதர்சன இடரில் இருந்து தற்காலிகமாக தப்பித்தும் இருக்கிறேன்.
     அதில் ஒரு இன்பம் உண்டு. நிம்மதி உண்டு. உங்களை நீங்களே உந்தி செல்ல சிறு முயற்சி அது. இதை கேட்டால் சிறுப்பிள்ளைதனமாக உங்களுக்கு தோன்றலாம்.
ஆனால்...
முயற்சி செய்து பாருங்கள்!
முணுமுணுப்புகள் தொடரட்டும்!

No comments:

Post a Comment