Thursday, August 16, 2018

சொந்தங்கள் மகிழ்ச்சியே!

’நான்! என் பொண்டாட்டி! எம் புள்ளைங்க’ன்னு நம்மைநாமே சுருக்கிக்கிட்டு வாழுற நேரத்துல ’கடைக்குட்டி சிங்கம்’ வரவேற்க வேண்டிய திரைப்படம்.
’காசு இருந்தா சொந்தகாரங்க தானா வருவாங்க!’
’சொந்தகாரங்கன்னாலே தொந்தரவுதான்!’
’சொந்தங்கள் கண்ணீரை மட்டும் தான் கொடுக்கும்!’
’சொந்தங்கள் குசும்பு பேசும்! புரளி பேசும்!’
இந்த மாதிரி சொந்தகாரங்கன்னாலே கெட்டவங்க, ஆகாதவங்கன்னு நம்மள tune பண்ணுனதுல திரைப்படங்கள், மெகா சீரியல்களுக்கு பெரும்பங்கு இருக்கு
இப்ப வர்ற படங்கள் பெரும்பாலும் Nuclear family conceptஐ தான் முன் வைக்கிறாங்க. ’எவன் எக்கேடு கெட்டு போனா நமக்கென்ன… நமக்கு நம்ம குடும்பம் நல்லா இருந்தா போதும்’ங்கிற குறுகிய மனப்பான்மை கொண்டவங்கதான் அதிகம்!
கூட்டு குடும்பம், அதிலுள்ள சந்தோஷம், துக்கம் இதை சொல்ற படமா கடைசியா ‘சைவம்’ங்கிற படம் வந்துச்சு. அதுக்கு அப்புறம் இப்போ ‘கடைக்குட்டி சிங்கம்’
’அய்யோ சொந்தங்களே வேண்டாம்!’ன்னு சொல்றவங்க, இன்னொரு குடும்பத்துக்கு தானும் ஒரு சொந்தம்ங்கிறதை புரிஞ்சிக்கிறது இல்ல. சொந்தங்கள் கண்ணாடி மாதிரி. நாம எந்த முகத்தை காட்டுறமோ, அது அந்த பிம்பத்தை தான் நமக்கு திருப்பி பிரதிபலிக்கும்!
நாம ஒரு ரகம்! அதே மாதிரிதான் சொந்தங்கள்ல ஒவ்வொருத்தரும் ஒரு ரகம்! அதை புரிஞ்சு நடந்துக்குட்டாலே சொந்தங்கள் இன்பங்கள் தான்!
’நான் இப்படிதான்!’ன்னு ஒருத்தர் முறுக்கீட்டு நிப்பாரு! அவரையும் அரவணைச்சு போற சொந்தக்காரர் ஒருத்தர் இருப்பாரு! அவர்னால தான் அங்க காரியங்கள் சங்கடம் இல்லாம நடக்கும்! ’நீ முறுக்கீட்டு நின்னா, நானும் முறுக்கீட்டு நிப்பேண்டா!’ன்னு நின்னா நாம தனிமரம்தான்!
’அவன் எனக்கு அது செய்யல! நான் அவனுக்கு எவ்வளோ செஞ்சிருக்கேன் தெரியுமா!’ன்னு பூதக்கண்ணாடி போட்டுக்கிட்டு லாபநஷ்ட கணக்கு பாக்குறமே தவிர, சொந்தங்களுக்கு நாம கொடுக்குற அன்பும், நேரமும் தான் மிகப்பெரிய சொத்துங்கிறது புரிஞ்சிக்கிறது இல்ல.
என்னை பொறுத்தவரைக்கும் காசு ரெண்டாவது தான்! இதுல முரண்பட்ட ஆட்களும் இருப்பாங்க. சில சொந்தங்கள் காசுக்காக தான் நம்ம கூட ஒட்டி இருப்பாங்க. நம்மாள அவங்களுக்கு உதவ முடிஞ்சா பண்ணுவோம், இல்ல அமைதியா இருப்போம். நம்மக்கிட்ட காசில்லன்னு மதிக்காத சொந்தங்களுக்கு நாம கொடுக்குற தண்டனை அன்பு மட்டும்தான்! மாற்றத்திற்கான மிகப்பெரிய மந்திரமே அன்புதான்! அவங்களுக்கு அதே நிலைமை வரும்போது நம்மள நெனைச்சு பார்ப்பாங்க. காசு இருந்தாலும் இல்லன்னாலும் அவன் ஒரே மாதிரி தான் இருக்கான். நம்ம மேல அன்பும் அக்கறையும் வெச்சிருக்கான்னு திரும்பி வருவாங்க!
இது நான் உணர்ந்த உண்மை!
’கடைக்குட்டி சிங்கம்’ போன்ற திரைப்படங்கள் இனிக்க இனிக்க இனியும் வரவேண்டும்!
2BHKல அடைஞ்சி கெடக்குற nuclear குடும்பங்கள். தன்னோட சொந்தங்கள் கூட சேர்ந்து மகிழ்ச்சியா இருக்கணும்!
இயக்குநர் பாண்டிராஜ்க்கு நன்றி!

No comments:

Post a Comment

BJP’s Clean Sweep in Bypoll