Friday, July 10, 2020

ஊடக அரசியலும் தமிழக அரசியலும்

தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் கூறிய கருத்துக்கள் பலவும் திரிக்கப்பட்டு, பொய் முலாம் பூசப்பட்டு, கிண்டல் கேலிகளுக்கு உள்ளாகி, தலைவர் ஆதரித்து ஊடக விவாதங்களில் கலந்து கொண்டோரை பேசவிடாமல், தலைவரின் கருத்துக்களை முன் வைக்கவிடாமல் முடக்கி, தாங்கள் விரும்பும் சித்தாந்தத்திற்கும், அரசியல் கட்சிகளுக்கும் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் அடிமை சேவகம் செய்த அந்த சில 'நடுநிலை!?' ஊடகங்களின் லட்சணத்தை தமிழகத்திற்கு வெட்டவெளிச்சமிட்டு காட்டிய மாரிதாஸ் போன்றோரை ஆதரிக்க வேண்டிய தருணம் இது.

இல்லல்ல.... அவர் சங்கி, பிஜேபி. அவர்களை ஆதரித்தால் நாமும் சங்கியாக முத்திரை குத்தப்படுவோம் என்று யோசித்து கொண்டேயிருந்தால், நம்மை விட முட்டாள்கள் எவரும் இருக்கமாட்டார்கள்.

இதுவும் கூட அந்த கட்சி மற்றும் ஊடக கும்பலின் தந்திர வேலைதான்! அவர்களுக்கு எதிர்க்கருத்து பேசுவோர் எல்லேரும் சங்கி, பக்தாள், இந்துத்துவாதி!
நம் தலைவரே அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

துக்ளக் விழாவில் தலைவர் வலியுறுத்தியதும் இதுதான். நினைவுப்படுத்தி பாருங்கள். நடுநிலை ஊடகங்கள் நடுநிலையோடு செயல்படுங்கள் என்று கேட்டு கொண்டார். அதற்கும் அவரை களங்கம் கற்பித்து, ட்ரொல் செய்து ரசித்தனர்.

மாரிதாஸ் போன்றோர் தொடர்ந்திருக்கும் இந்த போர், ஊடகத்திற்கானது மட்டுமல்ல, தமிழக அரசியலுக்கும், அதன் எதிர்க்காலத்துக்கும் மிக அத்தியாவசியமான ஒன்று.

மிகப்பெரிய அசுரபலம் கொண்ட ஒரு கட்சியையும், அதன் அடிவருடிகளையும் எதிர்த்து, அவர்கள் உண்மை ரூபத்தை தோல் உரித்து காட்டும் மாரிதாஸ்களுக்கு, மக்களாகிய நாம்தான் ஆதரிக்க வேண்டும்.

ஆட்சியில் இல்லாதபோதே இத்தனை அட்டூழியங்கள் அரங்கேற்றும் கட்சி, நாளை ஆட்சிக்கு வந்தால்... உண்மை உரக்க சொன்ன மாரிதாஸ்களின் நிலைமை!

அப்போது, "அய்யோ பாவம்! மாரிதாஸ் நல்ல மனுசன், இப்படி பழி வாங்கிட்டாங்களே!" என்று குமுறுவதால் ஒரு பயனும் இல்லை. 
கேப்டன் கடந்து வந்த அரசியல் பாதையை நினைந்து கொள்ளுங்கள்.

இதுதான் நேரம் மக்களே!
சரியான நேரம்!
நம் எண்ணத்தை பிரதிபலிக்க!
எதிர்ப்பை காட்ட!
தக்க பாடம் புகட்ட!

பி.கு.: இவர்களுக்கு இனியாவது கடிவாளம் இடவில்லை எனில், நாளை நம் தலைவரின் அரசியல் பயணித்தில் இவர்கள் வீசும் கற்களை அள்ளுவதில் மட்டும்தான் நம் கவனம் இருக்கும். மக்களை பற்றி சிந்திக்கவிடாமல், நம்மை அவர்கள் பின்னால் ஓடவிட்டு ரசிப்பர். அந்த வித்தையில் கைதேர்ந்தவர்கள் நம் 'நடுநிலைகள்!?'

'முதல்வன்' திரைப்படத்தில் எதிர்க்கட்சி தலைவர் ரகுவரனிடம் முதல்வர் அர்ஜுன் ஒரு கேள்வி கேட்பார், " நான் மக்களை பத்தி சிந்திப்பேனா, இல்ல நீ எங்க குண்டு வைப்பன்னு உன் பின்னாடி சுத்திக்கிட்டு இருப்பனா?"

இதுவே கூட நாளை நம் நிலைமையாகலாம்....
இன்று நாம் தெளிவாகவில்லை என்றால்!

No comments:

Post a Comment