
காலை குளிரில் தேநீர் கடையொன்றில் இயேசுதாஸின் காந்தர்வ குரலில், சபரிமலை ஐயப்பனின் ஹரிவராசனம் ஒலித்துக் கொண்டிருக்க, மனதுள் ஓர் ஏக்கம் திரண்டு நின்றது. எப்போது சபரிமலை செல்வோம் என்று...
இரவில் ஐயனை உறங்க வைக்க இதே ஹரிவராசனமும் அதிகாலை அவர்தம் துயில் எழுப்ப சுப்ரபாதமும், அங்கு சபரிமலையில் அனுதினமும் ஒலிக்கும். இயேசுதாஸின் தெய்வீக குரல் அம்மலை முழுதும் வியாபித்திருக்கும். இப்பாடல்களை கேட்க ஐயனின் மனம் குளிரும். பல் நோக குளிர் இருப்பினும், பாதை முழுதும் கடினங்களே நிறைந்து இருப்பினும், இப்பாடல்களை கேட்க நம் மனமும் உருகும். நம்மை அரியாது கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏகாந்த வாசியான ஐயனின் ரூபமே நம் முன் நிலைத்து நிற்கும்.
அந்த திவ்ய அனுபவத்துள் திளைத்திருக்கும் பாக்கியம், மனிதர்கள் நம் எல்லோருக்கும் வாய்த்திடல் வேண்டும்.
காலையில் அந்த பாடலை கேட்டு லயித்திருக்க, "எப்போது எனை வந்து காணப்பதாய் உத்தேசம்?" என்று ஐயன் அவருக்கே உரித்தான புன்னகையில் கேட்பது போல் இருந்தது!
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
No comments:
Post a Comment