என் அறையில்
என் மேஜையில்
கண் முன்னே
கன்னி பெண்ணவள்
மெல்லிடையாள்
மதி நிறைந்த
குணவதியாம் நல்
குலமகள் அவள்தம்
விழி அசைவில் என்
தலையசையும்!
தஞ்சை ஒய்யாரி ஆட்டத்தை
கண்ணார கண்டு களித்து,
கொலுசு ஓசையை
காதோரமாய் ரசித்திடும்
ரசிகன் என்
ரசனையை ரசிக்கும்
ரசிகை அவளே!
அவளை காண
உதடுகள் சிரிக்கும்
மனம் ஒளிரும்!
விந்தைதான்...!
வித்தைக்காரி அவள்
விழி வலையில் எங்ஙனம்
வீழ்ந்தேன் என்று....!
- தலையாட்டி பொம்மையின் கைப்பாவையானவன்
♥️
No comments:
Post a Comment