Tuesday, January 29, 2019
Seethakathi - சீதக்காதி
இன்றைய நாள் ’சீதக்காதி’ திரைப்படத்துடன் நிறைவடைகிறது
நிறைந்த மனதுடன் உறக்கத்திற்கு செல்கிறேன்
விஜய் சேதுபதியின் மீதுள்ள ஈர்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது
’96’ஐ தொடர்ந்து கோவிந்த் வஸந்தாவின் இசையினுள் மீண்டும் ஒருமுறை இழைந்தோடி போனேன்
படத்தின் இறுதிக்கட்டத்தில் இயக்குநர் மகேந்திரன் சொல்லும் விஷயம்... ஏதோ... வெள்ளைத்தாமரை மீது அமர்ந்திருக்கும் அந்த கலைமகளே உரைத்தாற்போல் ஓர் உணர்வு!
திரையரங்கில் இத்திரைப்படத்தை தவறவிட்டது தவறு என்று உணர்கிறேன்
இப்படத்தில் எனக்கு மிகவும் நெருக்கமான, நெகிழ்ச்சியான சில தருணங்களை உங்களுடன் பகிர்கிறேன்
Wednesday, January 2, 2019
Thursday, December 13, 2018
Thursday, December 6, 2018
Friday, November 2, 2018
டெய்லர்கள் எனும் தையல்காரர்கள்
என் சிறுவயது ஞாபகம். என்றும் அவர்களை பிஸியாகத்தான் பார்த்திருக்கிறேன். அதுவும் பண்டிகை காலங்களில், கோடைக்கால விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நேரம் என்று இந்நேரங்கள் அவர்கள் தெய்வத்திற்கு சமமானவர்களாக தெரிவார்கள். அவர்களை காண்பதே அரிதாக இருக்கும்!
அவர்கள் வேலையே அவர்களை முழு நேரம் ஆட்கொண்டிருக்கும்.
அந்த குறுகிய தெருவில் அவர்கள் கடை கூட ஓர் இடுக்கில்தான் இருக்கும். அங்குதான் வேலை முடிந்துவரும் ஆண்கள் பலரும் கூடுவர். ஊர் கதை, உலக கதை எல்லாம் பேசி, டீ, வடை, பஜ்ஜிகளை உள்ளே தள்ளி மாலை நேரம் முழுவதும் அங்குதான் பேசி தீர்ப்பர்.
தீபாவளி தொடங்க இரண்டு மாதங்களுக்கு முன்பே பரபரப்பாவார்கள். அத்தனை வேலை இருக்கும். மலைப்போல் வேலை இருந்தும், சிரித்துகொண்டும், அரட்டை அடித்து கொண்டும் வேலை செய்து கொண்டேதான் இருப்பார்கள்.
அவர்கள் டெய்லர்கள் எனும் தையல்காரர்கள்.

தீபாவளி அதிகாலை குளித்து அவர்களிடமிருந்து அப்பா பெற்று வரும் புது துணிகளுக்காக கண்கள் விரிய காத்திருப்போம். தீபாவளி என்றால் பட்டாசுகள் வெடிப்பது குஷி என்றால், புத்தாடையில் தான் அத்தனை கோடி சந்தோஷம் அடங்கியிருக்கும். அன்று விடியும் வரை நமக்கு புத்தாடை வருமா இல்லையா என்பது கூட உறுதியில்லை.
ஆனால் தன் வீட்டில் தீபாவளி கொண்டாட முடியாமல் வேலையே கதி என்று இருப்பர். அப்போதும் சிரிப்புக்கும் நகைச்சுவைகளுக்கும் தேநீர்களுக்கும் குறைவே இருக்காது!
தீபாவளி அன்று நிச்சயம் புத்தாடை நம் கைவந்து சேரும்! தெருவில் நாங்கள் பட்டாசு வெடித்து கொண்டிருக்க, தையல் மெஷினும் உடன் ஓடிக்கொண்டிருக்கும். வெடி சத்தமும், தையல் மெஷின் சத்தமும் ஒருப்போலே லயித்திருக்கும் அந்த விடிகாலை வேளை இன்னும் என் மனதில் பதிந்துள்ளது.
”டேய் கண்ணா… டீ சாப்பிடுறா…”
என்று அந்த அடர்குளிரில் அவர் கொடுக்கும் ஒரு டம்ளர் சூடான தேநீர், நமக்கு அளிக்கும் கதகதப்பை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை!
நேற்று என் வீட்டருகே இருந்த டெய்லர் ஒருவரை சந்தித்தேன். வயதாகிவிட்டது. அதே சைக்கிள் ஆனால் ஓடித்தேய்ந்திருந்தது. புது மெஷின் ஒன்று சேர்ந்துள்ளது. மீதிமிருக்கும் மெஷின், சாமி புகைப்படங்கள், கட்டை நாற்காலி என அனைத்தும் அப்படியே! மாறாமல்!
ஆரவாரமில்லை. பரபரப்பில்லை. ஆளில்லா சிரிப்பில்லா தேநீரில்லா அவர் ஒருவர் மட்டுமே இருக்கும் கடை பார்க்க சங்கடமாக இருந்தது. அதுவும் தீபாவளிக்கு இரண்டு மூன்று நாட்களே இருக்க…
”எல்லாரும் ரெடிமேடுக்கு போயிட்டாங்க கண்ணா… அதுதான வசதி! போனமா எடுத்தமான்னு…”
என்று சொல்லி அவர் சிரிக்க… என்ன சொல்வதென்று தெரியாமல் பேருக்கு ஒரு சிரிப்பை நானும் உதிர்த்தேன்.
நானும் கூட இந்த தீபாவளிக்கு ரெடிமேட் T-shirt தான் எடுத்துள்ளேன் என்று நினைத்து தலைகவிழ்ந்து அங்கிருந்து வந்தேன்.
கண்ணுக்கு தெரிந்து அழிபவை சில…
கண்ணுக்கு தெரியாமலே அழிபவை பல!
இந்த தையல்காரர்கள், அந்த ’பல’ வகையில் உட்பட்டவர்களே!

Friday, October 19, 2018
Sabarimala Issue
சபரிமலை விவகாரத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் முகநூல் நண்பர்கள் பலரின் பதிவுகளையும் பார்க்கிறேன். அதில் அதிகம் முனைப்போடு முந்தியடித்து கருத்து சொல்பவர் பெரும்பாலும் இந்துமதத்தவர் அல்லாதோரும், இந்து மத நம்பிக்கையற்றவர்களும், கடவுள் நம்பிக்கையற்றவர்களுமே பார்க்க முடிகிறது.
எனக்கு புரிந்தவரை அவர்கள் சொல்லவேண்டியது, ’ஆணோ பெண்ணோ கோவிலுக்கு போகாதோ, அது மூடநம்பிக்கை!’ என்பதே ஆகும்! ஆனால் அதை விடுத்து, ‘ஆம்! பெண்களும் கோவிலுக்கு செல்ல வேண்டும்! அதுவே சம உரிமை!’ என்பது அவர்கள் அடிப்படை கொள்கையிலிருந்து, agendaவிலிருந்து மாறுப்பட்டு இருக்கிறதோ என்கிற எண்ணம் தோன்றுகிறது.மேலும் இந்த சம உரிமை, சமத்துவம் எல்லாம் நிலைநாட்ட இவர்கள் முறுக்கிக்கொண்டு நிற்பது இந்துமதத்திற்கு எதிராக மட்டுமே என்பது நிதர்சன உண்மை!
இவர்களை தவிர்த்து எல்லா விஷயத்தையும் entertainmentஆக மட்டுமே பார்க்கும் இளையோர் கூட்டம். நமக்கு விஷயம் தெரியவில்லை என்றால் அது மூடநம்பிக்கை, தேவையில்லாத சம்பிரதாயம், வேலையற்ற முன்னோரின் வெட்டி பழக்கவழக்கம் என்று உதாசினப்படுத்தி அதை அசிங்கப்படுத்துவது! கொஞ்சம் நேரம் ஒதுக்கி, ஏன் அந்த பழக்கவழக்கம் இருக்கிறது என்று ஆராய்வதில் சோம்பேறித்தனம். எல்லாமே instantஆன இவ்வுலகில், googleக்கும் wikipediaவுக்கும் சரணம் சொல்லுவோமே தவிர உண்மையை அறிந்து கொள்ள ஒரு அடி முன்வைக்க மாட்டோம்!
இந்து மதத்தின் பெரும்சாபமே, அதில் உள்ள பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்களின் நோக்கம் அறியாமல் இருப்பதே! அதை சொல்லித்தர வேண்டிய பெற்றோர்களுக்கும் விஷயம் தெரியாது! ஏனென்றால் அவர்கள் பெற்றோர்களுக்கு தெரிந்திருக்காது அல்லது சொல்லாது போயிருப்பார்கள்.
And இன்னொரு mindset தற்போது பரவலாக இருப்பதை பார்க்க முடிகிறது. ”Break the rules! போராடணும்! எதிர்த்து நிக்கணும்!”. ஆனால் விநோதம் என்னவென்றால் இதை எல்லாம் செய்ய களத்திற்கு செல்லும் கூட்டம் மிக குறைவுதான்! அவர்கள் வீரியமெல்லாம் சமூக வலைதளங்களோடு முடிந்துவிடுவதுதான் சோகம்!
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக இந்திய ஊடகங்களும் தங்கள் பெண் நிருபர்களை போராட்ட களம் என்று தெரிந்தே சபரிமலைக்கு செய்தி சேகரித்து வருமாறு அனுப்பி வைக்கிறது. போராட்டமே பெண்கள் நுழையக்கூடாது என்பது தெரிந்திருந்தும்...
ஊடகங்களுக்கு எல்லாமே storyதான், நோக்கமெல்லாம் TRPதான்! Breaking News, Exclusive இல்லையென்றால் மூச்சிரைத்து போவார்கள். அவர்களுக்கு எது வியாபாரத்தை அதிகம் ஈட்டிகொடுக்குமோ அதையே பரப்புவார்கள்.
சபரிமலை விவகாரம் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு மட்டுமல்ல கேரளத்து கம்யூனிஸ ஆட்சியின் கடைசி காலம் என்றே கருதுகிறேன். உச்சநீதிமன்றம் சொன்ன சொல்லை வேதவாக்காக கொண்டு செயல்படும் பினராய் விஜயன் சபரிமலைக்கு ஒரு நிலையும், முல்லை பெரியாறுக்கு ஒரு நிலையும் எடுப்பதுதான் அரசியல்! பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை சிதைப்பதில் காட்டும் வீராவேசம் அவருக்கே பாதகமாக மாறும்!
நீதிமன்ற தீர்ப்பு இருப்பினும், நான் ஆணித்தரமாக நம்புவது… மக்களை மிஞ்சிய சக்தி எதுவுமில்லை! இப்போராட்டத்தில் இந்து மதம் அல்லாத மற்ற மதத்தினர் சபரிமலை சம்பரதாயம் அறிந்து, தீர்ப்புக்கு எதிராக குரல் கொடுத்ததுதான் யதார்த்த இந்தியா!
பாய் டீக்கடைக்கு ஒரு ஐயப்ப பக்தர் போனால், அவர் விரதம் அறிந்து நடந்துகொள்வர் இங்குள்ள இஸ்லாமிய நண்பர்கள்!
இங்கு பிரிவினை உண்டாக்குவது பாஜக, ஆர்.எஸ்.எஸ் என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது!
பிரிவினையே இருக்கக்கூடாது என்று வலியுறுத்தும் கட்சிகள் தான் அதை முன்நின்று அரங்கேற்றுகின்றன!
சரி... அவர்கள் பிழைப்பும் நடந்தேற வேண்டுமல்லவா…
சபரிகிரிநாதா… அவர்களையும் மன்னித்து அருள்வாயாக!
சுவாமியே சரணம் ஐயப்பா!
Subscribe to:
Posts (Atom)