Tuesday, August 10, 2010

நான் ரசித்த திரைப்படம்.

எத்தனையோ படங்கள் பார்த்ததுண்டு

அவற்றில் சில, நெஞ்சில் நீங்காது இருப்பவை!

அப்படி ஒரு படம் பற்றி எழுதுகிறேன்.

ிறைய பேர் பார்த்திருக்க கூடிய படமது

இப்படம் பார்க்க சொல்லி யாரும் வற்புறுத்தவில்லை. ஒரு டி வி டி கடையில் கண் மேய்ந்து கொண்டிருக்கையில் இந்த படத்தின் முகப்பு அட்டை தென்பட்டது.

இது வரை பார்த்திராத வர்ணங்களும், அதிலிருந்த மனிதரின் தொனியும் என்னை ஈர்த்தது.

அப்போது திரைப்படங்கள் பற்றிய எந்தவொரு விஷயங்களையும் தெரியாத நிலை எனக்கு (இப்போதும் அப்படிதான்!)

'சரி வாங்கி தான் பார்ப்போம்!' என்று அதை வாங்கினேன்.

படத்தையும் பார்த்தேன்.

அதில் நடித்த முன்னணி நடிகருக்கு வயது அறுபது எழுபது இருக்கும். ஆனால் அவர் அவதரித்த அந்த கதாபாத்திரம் கண்டு ரசித்து, என் மனதினுள் அவருக்கு ஓர் அரியாசனமொன்றையிட்டேன்!

("படத்தோட பெயரை சொல்லி தொலடா!!!" என்று உங்கள் மனம் குமுறுவதை உணர்கிறேன்).

அந்த படத்தின் பெயர் 'சர்க்கார்' (SARKAR), ஹிந்தி மொழி திரைப்படம்











ராம் கோபால் வர்மா (RAM GOPAL VARMA) இயக்கி, அமிதாப் பச்சன் (AMITABH BACHAN), அபிஷேக் பச்சன் (ABHISHEK BACHAN), கே.கே மேனன் (KAY KAY MENON), ரவி களே (RAVI KALE), கோட்டா ஸ்ரீநிவாஸ் ராவ் (KOTA SREENIVASA RAO)ஆகியோர் நடித்து வெளிவந்த படம் அது.

படம் தொடங்கும் முன்னரே இவ்வரிகளை கடந்து தான் நாம் செல்வோம்.

'ஆங்கிலத்தில் வெளியான 'காட் ஃபாதர்' (THE GODFATHER) என்ற படம் என்னை மிகவும் ஈர்த்தது. சர்க்கார் என்கிற இந்த படம், 'காட் ஃபாதர்' என்ற அற்புத படைப்பிற்கு என் சமர்ப்பணம்!' என்று ர்மா குறிப்பிட்டிருப்பார்

'ர்க்கார்' என்ற திரைப்படம் வேறொரு மொழி படத்திலிருந்து தழுவி எடுக்கப்பட்டாலும், அதன் சாராம்சம் கொண்டு நம் நாட்டின் தரத்திற்கு, அதன் உண்மையான போதை ஏற்ற கூடிய நெடியை அப்படியே திரையில் வெளிக்காட்டிய வர்மாவுக்கு பாராட்டுகள் .

இப்படம் பார்த்த பின் தான் காட்ஃபாதர்’ என்ற படம் பார்க்க ஒரு தூண்டுதல் ஏற்பட்டது. படம் பார்த்தேன்!









கதாபாத்திரங்கள் எல்லாம் நிஜ மனிதர்களாகவே வாழ்வதை உணர்ந்தேன்.

ர்லீன் ப்ராண்டோவின் (MARLON BRANDO) ஒவ்வொரு அசைவுகளும் மனப்பாடமானது.

ல் பசின்னோ (AL PACINO) என்னும் நடிகரின் விசிறியானேன்.

ின்னஞ்சிறு கண் அசைவுகள் கூட ஒரு காட்சியின் தன்மையை மாற்ற வல்லது, ௌனம் கூட மெலிதாய் பேசும், இதுப்போல பல வித்தைகள் இப்படத்தில் ரசித்தேன்.

சரி! நான் ரசித்து இருக்கட்டும்! ராம் கோபால் வர்மா என்னும் ரசிகன் இப்படத்தை எவ்வளவு ரசித்திருப்பான் என்று யோசித்து நெகிழ்ந்தேன்.

'இது சமுதாய சீர்த்திருத்த படமில்ல! ஒரு மனுசனுக்கு நல்ல கருத்து எதுவும் இந்த படம் போதிக்கல!

‘ஆர்ட்’ (ART) இல்ல, கிராமர்’ (GRAMMAR) இல்ல, மீனிங்’ (MEANING)இல்ல... இது ஒரு படமே இல்லன்னு' சொன்ன கும்பலும் இருந்தது.

'என்னய்யா கேமிரா? சும்மா டீ கப்புக்கு அடியில, இருட்டுக்குள்ளயெல்லாம் வெச்சு எடுக்குறான்?

அதுக்கு மீனிங் இல்லய்யா! 'கோவிந்தா... கோவிந்தான்னு...' ஒரு பாட்டு எங்க பார்த்தாலும் வருது! அது ஏன் வருது? எதுக்கு வருதுன்னே தெரியல! அமிதாப் பச்சன் அவரோட டைம் வேஸ்ட் பண்ணீட்டார்! ராம் கோபால் வர்மா சும்மாவே இருந்திருக்கலாம்!' என்றெல்லாம் வாய் இருப்பதற்காகவே பேசிய மக்களும் இருந்தனர்.

இதுவரை எடுத்த சினிமாவிலேயே சர்க்கார் ஒன்றும் சிறந்த திரைப்படமல்ல. அதை வர்மாவே ஒப்புக் கொள்வார்!

ஆனால் அந்த படத்தை நிஜ வாழ்வில் வாழும் மனிதர்களை போலவே திரையில் சித்தரித்த விதம் பாராட்டுகுரியது!









சுபாஷ் நாக்ரே (எ) சர்க்கார் - அரசாங்கம் இருந்தும் பலனில்லாத ஒரு இடத்தில், அந்த அரசாங்கத்தை விட ஆற்றலும் வேகமும் கொண்டு மக்களுக்கு நன்மை மட்டும் செய்யும் ஓர் மனிதர்.

அமிதாப் பச்சன், கருப்புடை அணிந்து, ருத்ராச்ச மாலையுடன், கூன் போட்ட நடை கொண்டு என்றும் நேர் வழி செல்லும் கதாபாத்திரம். இவரை தவிர இந்த கதாபாத்திரத்தை அலங்கரிக்க இங்கு வேறு யாரும் இருக்க முடியாது என்பது என் ஆணிதரமான கருத்து!

ஒவ்வொரு பிரச்சனைகளையும் பொறுமையாய் மிக நேர்த்தியாய் இவர் சரிசெய்யும் விதம் நம் எல்லோரையும் கவரும்


விஷ்ணு
நாக்ரே
- சர்க்காரின் மூத்த மகன். சர்க்காரின் முதல் எதிரி. தன் தந்தையே கொல்ல முயற்சித்த கதாபாத்திரத்தில் அசத்தியவர் கே கே மேனன்

சந்தர் - சர்க்கார் என்ன சொன்னாலும், கனகச்சிதமாய் அந்த வேலையை முடித்து வரும் சர்க்காரின்

உண்மையான, விஸ்வாசமான அடியாளாய் மிரட்டியவர் குப்பி’ புகழ் ரவி களெ. உடற்பயிற்சி செய்ய உதவும் டம் பெல்ஸ்’ (DUMB BELLS) கொண்டு ஒரு பெண்ணை மானப்பங்க படுத்தியவனை, அவனது ஆண்மைகான உறுப்பிலும், வயிற்றிலும் அடித்து நொறுக்கும் காட்சியில் அவர் கண்கள் சிந்தும் தீப்பொறி, நம்மையும் சுட்டெரிக்கும்!

ரஷீத் - சர்க்கார் என்னும் மனிதரின் தர்பாரில் எந்த பயமும் கவலையும் இல்லாமல் உள்ளே சென்று, சட்ட விரோதமான தன் கடத்தல் பொருட்களை எந்த பிரச்சனைகள் இல்லாமல் இறக்கி தர சர்க்காரிடமே பேரம் பேசும் தருணங்கள்... அருமை! புது முக நடிகர், முதல் படத்திலேயே அதிர்ஷ்டம் இவருக்கு! ஆமாம்! அமிதாப் பச்சனுக்கே வில்லனாவது என்றால் சும்மாவா...

சில்வர் மணி - சிறு பிள்ளை தனமான நகைப்புடன் வலம் வரும் கதாபாத்திரம். ஆனால் அந்த சிரிப்பினுள் எத்தனையெத்தனை விஷத்தன்மையை ஒளிந்திருக்கிறது என்பது படத்தின் திருப்புமுனை காட்சியொன்றில் தெரியும். 'நல்லவன் போல் இருப்பான் சண்டாளன்' என்ற சொல்லுக்கு உதாரணமாய், சில்வர் மணியாய் வாழ்ந்து காட்டியவர் கோட்டா ஸ்ரீநிவாஸ் ராவ். மனிதன் திரையினுள் தென்பட்டாலே போதும், வெறும் சிரிப்பு அதிரடிகள் தான்! அதே சமயம் பயத்தையும் கிளப்பி விடுவார்.

தன் மகளை மானப்பங்கப்படுத்திய கயவனை இந்த சட்டம் ஒன்றும் செய்யவில்லை. அவனுக்கு தண்டனை கிடைக்க செய்ய வேண்டும். அது உங்களால் தான் முடியும் சர்க்கார் என்று முதல் காட்சியிலேயே நம்பிக்கை தளர்ந்த குரலுடன் வந்து நம் இதயங்களை கசக்கி பிழிந்த நடிகர் வீரேந்தர சக்சேனாவின் நடிப்பு அபாரம்.

சுவாமி வீரேந்தராக கலக்கிய தெலுங்கு நடிகர் ஜீவா, சர்க்காரின் முக்கிய ஆலோசகர் - கான், சாவத்தியா, முதலமைச்சர் மதன் ராத்தோர், இன்னும் மற்றுமுள்ள கதாபாத்திரங்கள் எல்லாவற்றையும் செதுக்கிய விதம் அருமை!

இந்த படத்தின் எல்லா காட்சியையும் இயக்குநர் தன் விதத்தில் எடுத்தியம்பினாலும், அதற்கு ஓர் முதுகெலும்பாய், பக்கபலமாய் அமைந்திருப்பது இரண்டு விஷயங்கள்.

ஒன்று - ஒளிப்பதிவு, மற்றொன்று இசை.

ஒளிப்பதிவாளர் அமித் ராயின் (AMIT ROY) கேமிரா, நம்மை சர்க்காரின் இருண்ட உலகத்தினுள் எந்தவொரு போலித் தன்மையும் இல்லாமல் இயல்பாய் கொண்டு செல்லும். படத்தில் இவர் உபயோகித்திருக்கும் ஒரு விதமான BROWN COLOR இந்த படத்தின் இயல்புதன்மைக்கு (NATURALITY) நன்கு கைகொடுத்திருக்கும்.

அமர் மொஹிலே (AMAR MOHILE) என்ற இசையமைப்பாளரின் கரம் பொன் ஆகட்டும்! சிறு சிறு நுணுக்கமான காட்சிகள் முதல் நம்மை அசரடிக்க கூடிய காட்சிகள் வரை, அந்தந்த நிமிடங்கள் ஜீரணிக்கும் வண்ண இசையமைத்து இப்படத்திற்கு தேவையான போஷாக்கை ஊட்டியவர் இவர்

அரசியல், சினிமா, அரசாங்கம் என்று இன்னும் சிக்கல்கள் பல நிறைந்த விஷயங்கள் உள்ள இந்நாட்டின் நிலைமையை சர்க்கார் படம் மூலம் வெட்ட வெளிச்சமாய் காட்டியிருப்பார் வர்மா.

பால் தாக்ரேயின் தாக்கம் அதிகமுள்ள சர்க்கார் கதாபாத்திரம் கொண்ட இந்த படம், மக்களை வந்து சேர பெரும் பாடுபட்டதாய் கேள்விப்பட்டுள்ளேன்.

'காப்பி அடிச்சிட்டான்....செல்லாது! செல்லாது!' என்று நாட்டாமை கணக்காய் மல்லுக்கு வந்து நிற்கும் கூட்டத்திற்கு சொல்கிறேன்.

திருடுவதை சத்தமில்லாமல் செய்து விட்டு, 'இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே நான் தான் செய்தேன்!' என்று வெட்கமேயில்லாமல் மீடியாக்கள் முன் பேட்டி அளிக்கும் பல இயக்குநர்கள் மத்தியில் ராம் கோபால் வர்மா தன்னை மிகவும் ஈர்த்த ஒரு வேற்று மொழி திரைப்படத்தை தழுவி இங்கொரு படம் தயாரித்து வெளியிட்டார். அதன் அழகோ, வனப்போ, ரசனை தன்மையோ, இயல்பு தன்மையோ அடி படாமல் செதுக்கியும் உள்ளார். அதனை படத்தின் ஆரம்பத்திலேயே ஒப்புகொண்டும் இருப்பார்.

Never touch The Classics என்ற ஒரு சொல்லுண்டு.

ஏனென்றால் 'CLASSICS' என்பவைகள் நெருப்பு போலே...வெளிச்சம் தரும்.... குளிர் காயலாம்... ஆனால் அதனுள் கையிட்டு விளையாட நினைத்தால்... அந்த நினைப்பினை கூட சுட்டு விடும் அபாயமுள்ளது. அந்த பயமில்லாமல் இதை கையாண்ட இயக்குநர்கள் இங்கு ஏராளம்! அதில் வர்மாவுக்கு தனி இடம் உண்டு.

சினிமா இயக்குநர்கள் தங்கள் 'ENCYCLOPEDIA'வாக கருதும் படங்களில் காட்பாஃதரும் (THE GODFATHER)ஒன்று!

அதனை சிதைக்காமல் இங்கு ஹிந்தியில் இயக்கியமைக்கு ராம் கோபால் வர்மாவுக்கு ஓர் சலாம்!

சர்க்கார் - நிச்சயம் பார்த்து ரசிக்க கூடிய ஓர் நல்ல திரைப்படம்!!









His Eyes are more than enough to narrate many many stories!

Love you Amitabh Sir!


IMDB link: http://www.imdb.com/title/tt0432047/

No comments:

Post a Comment