Tuesday, August 10, 2010

நான் ரசித்த ஓர் காட்சி.

இது மனதில் என்றும் நீங்காது இருக்கும்

மரித்தாலும் என்னை விட்டு மறைந்து போகாது என்பதை ஊர்ஜிதமாய் சொல்லுவேன்

நடிப்புலகில் தான் ஒரு பெரிய நட்சத்திரமாய் மிளிர்ந்திட துடிக்கும் ஒரு ஜீவன். அதற்கான பயிற்சிகள் எல்லாவற்றிலும் தேர்ச்சியடைந்து விஜயத்தின் உச்சி நுகர நிற்கிறது. அந்த நேரத்தில் விதியும் காலமும் அவன் வாழ்வில் விளையாட ஆரம்பித்தது. மன வருத்தங்களும் பண சிக்கல்களுக்கும் இடையே தவிக்கிறான்.

அப்போது,

அவனுக்கு முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ேமிரா கண்கள் முன் நடிக்கும் முன்பு அந்த படத்தின் இயக்குநரின் முன் வசனத்தை மனப்பாடமய் சொல்லி நடித்து காட்ட வேண்டும். அவனும் நடித்து காட்டினான். மனதில் உள்ள வேதனை, வலி, அவனை அவனாய் இருக்க தடையாய் நிற்கின்றன.

தடுமாறுகிறான்! அவன் உதடுகளிலிருந்து வசனம் கோர்வையில்லாமல் உடைந்து விழுகிறது. இயக்குநர் யோசிக்க ஆரம்பிக்கவே, அவரது உதவி இயக்குநர் நம் நாயகனிடம் அவன் அணிந்திருக்கும் ஆடை அலங்காரங்களை கழட்ட சொல்கிறார். நம் நாயகனுடன் நின்றிருந்த ஒருவன் அந்த முக்கிய கதாபாத்திரம் நடிக்க தேர்வாகிறான். ஜமீன்தார் வேடமிட்டவனை போலீஸ் கான்ஸ்டபிள் வேடம் அணிய சொல்கிறார் உதவி இயக்குநர். ஏற்கனவே வேதனைகளின் உச்சத்தில் தவித்து நிற்கும் ம் ாயகனை இது மேலும் கலங்க செய்கிறது. முக அலங்காரம் செய்பவர் நம் நாயகனை நன்கு அறிந்தவர். அவருக்கு இவன் அனுபவிக்கும் வேதனையை உணர முடிகிறது.

மேக் அப் மேன்: (சப்தம் கம்மியாக)"கோப்பபடாத! வேஷம்தான் முக்கியம்.. எந்த வேஷமாயிருந்தா என்ன?

நாயகன்:( கோப்பமாய் )எத்தன நாளைக்குதான் போலீஸ் வேஷம் போடறதுன்னா... அப்பறம் போலீஸா நடிச்சதுன்னே பேராயிடும்.. வேணா! நான் போறேன்.. என்று தன் வேஷத்தை கழட்டி கொண்டிருந்தான்

மேக் அப் மேன்:"முகத்த காட்டாதப்பா... தாடி வெய்... மீசைய வெச்சு மறச்சுக்கோ. வேற யாரோன்னு நெனச்சுக்கட்டும்.. வர்ற வேஷத்த விடாதய்யா!." என்று போலீஸ் வேஷத்திற்கு தேவையான ஒட்டு மீசையையும் தாடியையும் நம் நாயகனின் கையில் திணித்துவிட்டு செல்கிறார்

கையில் ஒட்டு தாடியை கொண்டு, ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாமல் நின்றவன், அந்த நேரத்தில் செய்ய முடிந்த ஒரே செயல் - சப்தமில்லாமல் விம்மி அழுவதேயாகும்.

இருதயம் அழ, அது கண்கள் வழி சொறிந்தது.

தன் கையிலிருந்த ஒட்டு தாடியை கொண்டு முகம் மறைத்து அழுதான்.

தன் நிலையை நினைத்து அந்த உருகல் - என்னை கவர்ந்த காட்சி!

'இருவர்' என்ற திரைப்படத்திலேயே இக்காட்சி






இந்த காட்சி சிறப்பாய் மிளிர்ந்தமைக்கு காரணம் அதில் நடித்த நடிகர். இந்தியாவே வியந்து பார்க்கும் நடிகர்! அவர் மலையாளம் என்ற சின்ன வட்டத்தினுள் அடைந்துவிட்டாரோ என்று நான் கவலைப்பட்டதுண்டு. தமிழ், ஹிந்தி மொழிகளில் நடித்து பெயர் வாங்கியவர். அந்த நடிகரின் பெயர் - ோகன் லால்.

அற்புதம்! - அவர் நடித்த இந்த காட்சிக்கு நான் கூற கூடிய சொல்!

இக்காட்சியை இளகிய வண்ணத்தில், நம் கண்களை குளமாக்கும் வகையில் அமைந்திருக்க ஏதுவாய் இருந்தது - ஒன்று அதில் நடித்த நடிகரின் நடிப்பு. மற்றொன்று நம் இதயங்களை வருடி செல்லும் ஓர் வயலின் இசை! ஏ ஆர் ரஹ்மானின் இசை ஸ்வரங்கள் இக்காட்சியுடன் இணைந்து இழையோடி இருக்கும்.

மணி ரத்னத்தின் இயக்கமும் அழகு!

இக்காட்சியில் ஒரு தோல்வி! அதை அனுபவிப்பது அந்த கதையின் நாயகன் மட்டுமல்ல... நாமும் தான்!

No comments:

Post a Comment