Wednesday, August 4, 2010

எதுக்கு பழிக்கணும்?




















வணக்கம் சார்!
காலையில எந்திறிச்சு Facebookல 'எந்திரன்' படத்தை பற்றிய விமர்சனம் படித்தேன்.
அருமை!
தமிழ் சினிமாவின் வியாபார நுணுக்கங்களை தெள்ளத்தெளிவாய் தெரிந்தவர் எழுதியிருந்தார்
மகிழ்ச்சி!!

அவருக்கு என் பதில், எனது கருத்து
சண்டையில்லை! கோபமில்லை!!
Just sharing the facts and ideas

ஆனால் ஒரு விஷயம் அன்பரே!
இத்தனை மேள தாளங்களும், ரசிகர் ஆரவாரமும், மக்கள் வரவேற்ப்பும் இங்கு வேரு எந்த நடிகருக்கும் கிடைக்காத ஒன்று!
இது அதிர்ஷ்டம் என்றால் அது யாரயினும் சிரித்து விடுவார்கள்
இத்தனை கோடி மக்களின் இதயங்களில் குடிக்கொள்வது என்பதே ஒரு கிடைக்கப்பெறாத வரம் அல்லவா!
அத்துடன் இந்த திரைப்படம் தமிழ் 'COMMERCIAL' வியாபார சினிமா என்று நாம் வரையறுத்து வைத்துள்ள, வெகுஜன மக்களால் ரசிக்கப்படும் படங்களின் தன்மையை, அதன் 'OUTLOOK' தோற்றத்தை மாற்ற வல்லது.

















"எதுக்குய்யா இந்த மாற்றம்? வேஸ்ட்!" என்று நீங்கள் சொல்லலாம்
புதிதாய் வரும் சிறார்கள் எல்லாம் பஞ்ச் டயாலாக், அதிரடி வசனம், தான் மட்டும் தான் நாயகன், உலகை ரட்சிக்க பிறந்தவன் என்பது போன்ற ஒரே காட்சி அமைப்புகளில் நடித்து, மக்களாகிய எங்களை சலிப்பு தட்ட வைத்துள்ளனர்!

திரைப்படங்கள் முதலில் ஒரு மனிதனை எண்டெர்டைன் (ENTERTAIN) செய்ய வேண்டும்
பிறகு உங்கள் கருத்து வியாக்கியானங்களை அதில் தினியுங்கள்!
அதற்காக வெறும் கேலிக் கூத்துகளை மட்டுமே மேம்ப்படுத்தி காட்டும் திரைப்படங்களை நாம் தவிர்த்திடுவோம்!













நடிப்பு, கலை, அழகு, கிராம்மர் (Grammar) என்று திரைப்படங்களுக்கு நீங்கள் எத்தனை வரையறுப்புகள் இட்டாலும், எல்ல படங்களும் வியாபாரத்திற்கு தான்.

"நான் இதுவரைக்கும் யாருமே சொல்லாத கருத்து சொல்லப்போறேன்! உலக சினிமா வரலாற்றலயே இது தான் அப்படிப்பட்ட ஒரே படம்ன்னு" பீலா பார்ட்டிகளுக்கு மத்தியில் ரஜினி படங்களொன்றும் பெரிய விஷயமில்லை தான்!
ஆனால் இத்தனை பில்டு அப்புகள் கொடுத்து விட்டு கடைசியில் ஆள் முகவரியே தெரியாமல் போவது தான் வேடிக்கை!













ஷங்கர், தன் படங்கள் பற்றி ஏக போக வசனங்களை அள்ளித் தெளிப்பவரில்லை
He is a Film Director, who wants his film to be larger than life, king size, and his works should win at box office with huge profit!
நம்ம ஒரு செயல் செய்தாலும்
நம்மெல்லாத்துக்கும் அதே எண்ணமிருக்கும் தானே!

கலாநிதி மாறனிடம் நீங்களோ நானோ போய் கலை, சினிமா கிராமர், ஃபில்ம் கல்ட் (Film Cult), என்றெல்லாம் பேசலாம்.
இறுதியில், "இந்த ப்ராஜக்டுல எவ்வளோ ப்ரஃபிட் எஃஸ்பெக்ட் பண்றீங்க?" என்ற கேள்வியே நிலைக்கும்!
'He is a pure business man!' :-)

ரஜினி, ஷங்கர், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், கலாநிதி மாறன், மற்றும் ஹாலிவுட் கலைஞர்களுடன் சேரும் பொழுது, இறுதி வெற்றி தான்!
அந்த இறுதி இறுதியுமல்ல
அது புது தொடக்கம்!

"ஏன் டா நீ இத்தன பேசினதும் ஒரு கெழவனுக்கு சப்போர்ட் பண்ணியா?" என்று நீங்கள் கேட்டால்,
"ஆமா! ஏன்னா எங்களுக்கு தெரிஞ்ச 'Super Star' ரஜினி, 'உலக நாயகன்' கமல் ரெண்டு பேர்க்கும் வயசாயிடிச்சு! என்ன பண்றது?"

வியாபாரம் தாங்க இங்க எல்லாமே!
ஓ சீ ல இங்க எதுவும் கிடையாது
சேவைங்கற பேரில் நடத்துற கோல் மால் வேலை நமக்கு தெரியும்

கடைசியா நான் என்ன சொல்லப் போறேன்னா...
All Films are for Business and
Don't spit your hard feelings on Rajni, Shankar, Kalanithi Group alone
If you want to criticize the whole film world!

எண்டுல ஜெயிக்கனும் சார்!
அது தானே முக்கியம்?
:-)

நன்றி!
Bala.

No comments:

Post a Comment