பொழுது போகாமல் 'விகடன்' படித்துக் கொண்டிருந்தேன்
அப்போது யாரோ கதவை தட்டினார்கள்
கதவை திறந்தேன்
அதிர்ச்சி!
ஆச்சிரியம்!!
வாய் அடைத்து போயிருந்தேன்.
"உள்ளே கூப்பிடமாட்டியா பாலா?" என்றது கதவருகே நின்றிருந்த அந்த ஜீவன்
"வாங்க சார்! வாங்க!" என்று கனவில் கண்ட கன்னியை நேரில் கண்டது போல் மண்ணில் விழாத குறையாய் அவர் முன் குழைந்தேன்
அமர்ந்தார்
சுற்றியும் அவர் கண்கள் நிதானமாய் நோட்டமிட்டன
என்னை பார்த்தார்
நான் எவரஸ்ட் ஊச்சியில் நின்றிருந்த நிலையில் அவர் கண்களுக்கு தென்பட்டேன்!
"So... பாலா.... எப்பிடி இருக்க? உன்னோட Short films எல்லாம் எப்பிடி போகுது?" என்றவருக்கு
"நல்...லா போகுது சார்!" என்று விழி பிதுங்கிய கண்களுடன் சிரித்து பதிலளித்தேன்
பிறகு அவரும் நானும் நீண்ட உரையாடல்களுக்குள் சென்றோம்
அமைதியான மனிதர் என்ற பெயர் பெற்றவர்
ஆனால் உலகில் உள்ள ஒவ்வொரு விஷயத்தை பற்றி பேசினார்
இந்த உலகத்தை அவருடைய தெளிவான பார்வை கொண்டு என்னையும் பார்க்க செய்தார்
அழகு!
சினிமா, அரசியல், விளையாட்டு, என்று இன்னும் பற்பல விஷயங்கள்!
இருவரும் தேனீர் பருகினோம்
"டீ சூப்பர் பாலா!" என்று புன்னகைத்தார். மெலிதாய்.
புன்னகை - உதடுகள் மட்டும் சொறியவில்லை
அவர் கண்களும் உடன் சேர்ந்து ஜொலித்தன!
ரசித்தேன்!
என்னிடம் இருந்த சில கதைகள் அவரிடம் சொன்னேன்
பொறுமையாய் கேட்டார்
இறுதியில் அவர் அந்த கதையிலிருந்தே சில கேள்விகள் கேட்டு என்னை மடக்கினார்
சிக்கல்கள் அவிழ்க்க முடியாமல் நான் திணற,
அவரே அதற்கான விடைகளை எளிமையாய் தந்தார்
"பாலா! ஃபில்ம் இண்டஸ்டிரில நீ நிறைய கத்துக்கனும்! ஆடியன்ஸ் எந்த விததிலும் நாம குறைச்சு எட போட கூடாது! அத மனசில வெச்சிட்டு ஸ்டோரியை இன்னும் டெவளப் பண்ணு" என்றார்
அவர் விரல்களை பார்த்தேன்
அவை அமைதியாகவே இருந்தன
இடையிடையே ஆங்காங்கே அவை சொடுக்குகள் போட்டன
மேஜை மீது தாளங்கள் உருவாக்கின
எனது வீட்டு மொட்டை மாடி சென்றோம்
குளிர் காற்றில் அவர் எனக்கு குழந்தை போல் தெரிந்தார்
அவர் உதடுகள் அவர் காதுகளை தொடுமளவு வளைந்து புன்னகைத்தன
அவர் விரும்பி பல பாடல்களை கேட்டார்
அதில் இளையராஜா, எம்.எஸ்.வி,நௌஷாத், என்னியோ மோரிக்கோனே இசை ஸ்வரங்களே அதிகமிருந்தன!
அவருக்கு பிடித்த சில பட காட்சிகளை என்னிடம் சொல்லி வியந்தார்
அதில் அவர் கண்களையே நான் ரசித்தேன்
மிக அழகாய், பல சேதிகளை அவரது அமைதியான கண்களை கொண்டு வெளிக்காட்டினார்
"ஓகே பாலா! நேரமாச்சு. I am leaving da!" என்று எழுந்தார்
அத்தனை நேரம் என்னுளிருந்த மகிழ்ச்சி கோட்டை சட்டாரென்று உடைந்து நொறுங்குவது போலாயிற்று.
அவர் பின்னே குட்டி போட்ட பூனை போல் நடக்கலானேன்
"சார்.. என் முதல் படத்துக்கு...." என்று தயக்கத்துடன் நின்ற என் கண்களை பார்த்து
"கண்டிப்பா நான் தான் பண்றேன்... ஒரு நாள் சென்னை வா! ஸ்டுடியோல சில டியூன்ஸ் போட்டு காட்டுறேன். I am sure you'll be satisfied!' "
"கண்டிப்பா சார்! Thank You Sir!!" என்று மலர்ந்த என் முகத்தை பார்த்து,
"எல்லா புகழும் இறைவனுக்கே!" என்று புன்னகை சிந்தி சென்றார்
அவரது உதடுகள் உதிர்த்த கடைசி சொற்கள் என்னுள் பல நூறு முறை ஒலித்தன
ஒலித்தன! ஒலித்தன!
எனது மண்டையினுள் யாரோ மணியடிப்பதை உணர்ந்தேன்
எழுந்து பார்த்தாள் நேரம் 7 மணி
அருகிலிருந்த அலாரத்தை அமைதியாக்கி விட்டு படுக்கையிலிருந்து எழுந்தேன்
அலைபேசியில் விரல்கள் மேய்ந்தன
'ஆருயிரே! மன்னிப்பாயா? மன்னிப்பாயா?' என்ற குரல் என் செவி மடுகுகள், இடுக்குகள் வழி பயணித்து
இறுதியாய் உதடுகளிலும் கண்களிலும் புன்னகைகளாய் மிளிர்ந்தன
Love You Sir!
- Bala
A RAHAMANiac
:-)
No comments:
Post a Comment