Friday, August 6, 2010

'அப் இன் தீ ஏர்' - Up In The Air, The Film



















'அப் இன் தீ ஏர்' - 'Up In The Air' என்ற ஆங்கில படம் பார்த்தேன்
எதார்த்தம்!
ஜார்ஜ் கூளுனி (George Clooney) நடித்த படம்
எந்த சிரமத்தையும் வெளிக்காட்டாத முகம் கூளுனியுடையது!
அந்த முகம் இந்த படத்திற்கும் அவர் அவதரித்த கதாபாத்திரத்திற்கும் சரியாக பொருந்தியுள்ளது எனலாம்
அழகான கதைகளம்
"இதெல்லாம் ஒரு கதையா?" என்று யோசிக்க கூடும்
ஆனால் அதனுள் இருக்கும் மூர்க்கதனம், வலி, தோல்வியுடைய பிரதிபலிப்புகள் அருமை!
ஒவ்வொரு கண்ணீரும் சுடும்!
ஒவ்வொரு சிரிப்பும் சிந்திக்க வைக்கும்!!
கிராபிக்ஸ் கிளாமர் சேற்றில் தவிக்கும் ஹாலிவுட் திரையுலகத்திற்கு இது போன்ற படம் புது தெம்பளிக்க கூடிய சுவாசத்தை அளிக்க கூடியது
பின்னனி இசை இடம், பொருள், தெரிந்து நம்முடன் பயணிக்கிறது!
இப்படத்தில்,
கேமிரா பின் நின்று வித்தைகள் பல புரிந்த எரிக் ஸ்டில்பெர்க் (Eric Steelberg) மற்றும் படத்தொகுப்பாளர் டானா களாபர்மேன்னுக்கு (Dana Glauberman) சலாம்!
இப்படத்தின் இயக்குநர் ஜெசன் ரீயட்மேன்னுக்கு (Jason Reitman) வாழ்த்துக்கள்.
மனிதர்களை வெறும் சதைகளும் எலும்புகளும் போர்த்தி நடக்கும் பொருட்களாய் பாவிக்கும் தனியார் நிறுவனங்களின் மெத்தன தன்மையை தெள்ள தெளிவாய் தன் பேனாவால் செதுக்கிய வால்டர் கெர்ன்னுக்கு (Walter Kirn) கைத்தட்டல்கள்.
தனியார் நிறுவனங்களின் இந்த மெத்தனம் எத்தனை குடும்பங்களின் தினசரி வாழ்க்கையை பாதிக்கிறது என்பதையும் இலை மறைக் கனியாக காட்டிய விதம் பாரட்டத்தக்கது!
அமெரிக்கா என்பது சொர்க்க பூமி!
அங்கு சென்றால் நம் பிறவி பலனை அடைந்து விடலாம் என்று கனா காணும் நெஞ்சங்களுக்கு இந்த படம் சமர்ப்பணம்!

மன்னிக்கவும்!
பலர் உபயோகித்து சலிப்பு உண்டாக்கிய வாக்கியம் இனி வரப் போகிறது
ஆனால் இந்த படத்திற்கு இது சிறப்பாய் பொருந்தும்!
'இது படமல்ல பாடம்!!'

IMDB
http://www.imdb.com/title/tt1193138/

No comments:

Post a Comment