Friday, August 6, 2010

The Taking of Pelham 123, The Film




















காலை எழுந்து, மனைவி கையால் செய்த காபி குடித்து, நம் பிள்ளைகளை கொஞ்சி, தெய்வத்தின் முன்பு கோடான கோடி பிரார்த்தனைகள் வைத்து விட்டு அவசர அவசரமாய் மின் ரயில் வண்டியில் ஏறுகிறீர்கள். பெரும் கூட்டத்தினிடையே அடித்து பிடித்து, நெருக்கி தள்ளி உங்களுக்கான இடமொன்றில் கால் பதிக்கிறீர்கள். அருகில் இருக்கும் மனிதன் உங்களை ஆழ்ந்து பார்க்கிறான்.
திடீரென்று துப்பாக்கியுடன் சிலர் அந்த ரயிலில் எழுந்து மேல் நோக்கி சுடுகிறார்கள்.
"உங்கள நாங்க கடத்தியிருக்கோம். சத்தம் போடறவங்களுக்கு அப்போவே எமனோட மதிய சாப்பாடு சாப்பிடுற பாக்கியம் கெடைக்கும்!" என்று துப்பாக்கியை தன் தாடையில் தடவிய படி ஒருவன் உங்கள் முன் மெத்தனமாய் நடந்தால் எப்பிடியிருக்கும்?

இந்த சம்பவமும், இதை தொடர்ந்து நடக்க கூடிய விறுவிறுப்பான நிமிடங்களை நம் கண் முன்னே விவரிக்கும் திரைப்படம் தான் 'தி டேக்கிங் ஆஃப் பெல்ஹாம்123' (The Taking of Pelham 123)

கடத்தல் சம்பவங்களை மையமாய் வைத்து வெளியான திரைப்படங்கள் ஏராளம்.
'பெல்ஹாம்' அவற்றையெல்லாம் மிஞ்சிவிட வில்லை. ஆனால் அந்த சம்பவத்தின் அடி ஆழம் வரை நம்மை பயணிக்க செய்கிறது இந்த படம்.
ஏர் போர்ஸ் 1 (Air Force 1), டை ஹார்ட் 2 (Die Hard 2), ஃபேஸ் ஆஃப் (Face Off), எக்ஸிக்கூடிவ் டெஸிஷென் (Executive Decision), அண்டர் சீஜ் (Under Siege), ஸ்பீட் (Speed), ஹண்ட் ஃபார் ரெட் அக்டோபர் (Hunt for the Red October)போன்ற படங்களின் வரிசையில் இன்று 'பெல்ஹாம்' சேர்ந்துள்ளது
'அமெரிக்கன் கெங்க்ஸ்டர்' (American Gangster), 'டெரைனிங் டே' (Training Day) போன்ற படங்கள் மூலம் உலக புகழ் பெற்ற நடிகர் டென்செல் வாஷிங்டன் (Denzel Washington) நடித்து அசத்திய படமிது!
அவருடன், 'ஃபேஸ் ஆஃப்'(Face Off), 'வைல்டு ஹாக்ஸ்' (Wild Hogs), 'பல்ப் ஃபிக்ஸன்' (Pulp Fiction) போன்ற படங்களின் மூலம் தன் தனி முத்திரை பதித்த நடிகர் ஜான் ட்ரவொல்டா (John Travolta) இணைந்து கலக்கியுள்ளார்
நியூ யார்க் நகர பின்னணியில் நடக்கும் கதை இதனை மிக தெளிவாய் கையாண்ட நாவல் ஆசிரியர் மோர்டன் ஃப்ரீகூட் (Morton Freedgood), இந்த நகர ரயில்கள் பற்றியும், அதன் தொழில்நுட்பத்தையும் நன்கு கரைத்து குடித்துள்ளார் என்றே சொல்லலாம்!
அதன் வேகம் சிறிதும் குறையாமல் திரையில் பதித்த இயக்குநர் டோனி ஸ்காட்டின் (Tony Scott)ஆற்றல் அபாரம்!
அவரது படங்களில் பொதுவாகவே காணப்படும் 360 டிகிரி, 180 டிகிரி கேமிரா சூழன்று விளையாடும் ஷாட்ஸ் இந்த படத்திலும் நாம் ரசிக்கலாம்!
பல வெற்றி படங்கள் தந்தவர் இவர். எனிமீ ஆஃப் தி ஸ்டேட் (Enemy of the State), டேஜா வூ (Deja Vu), டாப் கன் (Top Gun) போன்ற படங்களை வரிசையிட்டு சொல்லலாம்
பின்னணி இசை - அமெரிக்க 'ஹிப் ஹாப்' (Hip Hop) கலாச்சார வகை இசையின் ஆதிக்கம் இப்படத்திலுண்டு
ஒலிப்பதிவாளர் அவரின் நுணுக்கமான வேலைப்பாடுகள் இப்படத்தில் பாராட்ட வேண்டிய ஒன்று!
கேமிரா கொண்டு சுற்றி விளையாடியவர் ஒளிப்பதிவாளர் டோப்பியாஸ் (Tobias)
படத்தொகுப்பும் சரிவர கை கொடுத்துள்ளது எனலாம்

இறுதியாய் 'மேன் ஆஃப் தி கேம்' போல 'மேன் ஆஃப் தி ஃபிலிம்' யாரென்று கேட்டால் டென்செல் வாஷிங்டன் தான் நம் கண்களுக்கு தெரிவார்!
இயல்பான அவர் நடை, கதாபாத்திரத்திற்கு ஏற்ற உடல் அமைப்பு, ஆண்மையுடைய அவர்தம் குரல், பல பல விவரங்கள் அளிக்கும் அவர் சிறு சிறு கண் அசைவுகள், நமக்கு!

So Don't Miss it!

No comments:

Post a Comment