Friday, September 10, 2010

For the First Time...

For the first time such a comment about me on FACEBOOK. I just want to retain it within me all along my life. So publishing in my blog. Written by my FB friend Arul Ezhil.

பெயர் திருட்டு அல்லது அடையாள அழித்தல்.....


நண்பர் கார்டூன் பாலா சில நாட்களாகவே இது தொடர்பான மன வருத்தத்தில் இருந்தார். கோவையில் இருந்து பாலா என்பவர் கார்டூனிஸ்ட் பாலா என்னும் பெயரில் கார்டூன் போடுவதாகவும். பலரும் அது நீங்களா? என்று தன்னிடம் கேட்டு தர்மசங்கடப்படுத்துவதாகவும் வருத்தப்பட்டு அவரது ப்ளாக் லிங்கைக் கொடுத்திருந்தார். நான் அதைப் பார்த்தேன். தோற்றம், அவரது படைப்புகள் (குறும்படம், சில கட்டுரைகள், போட்டோஸ்,) இது எல்லாமே அவரை ஒரு பெரிய இடத்துப் பிள்ளைபோல் காட்டியது. ஏதாவது ஒரு பிரபலத்தின் பிள்ளையாகவும் இருக்கலாம். நண்பர் பாலா போடும் கார்டூன்களுக்கு நேர் எதிரானவை அவை. ஜனகராஜ், மதன்பாப், தொடங்கி மணிரத்னம், என்று சமூகம் எதை வரைந்தால் எடுத்தால் சிக்கலில்லாமல் கொண்டடுமோ அதை அவரது தளத்தில் காண முடிந்தது. மற்றபடி அவர் வரைந்திருப்பவைகள் கார்டூன்களா? அல்லது டிரேஸ் வகை கலரிங்குகளா? என்றால் எனக்குத் தெரியாது. அந்த விவாதத்திற்குள் நான் செல்லவும் இல்லை.

அவர் வரைவதும், படம் எடுப்பதும், அவரது தனிப்பட்ட விஷயம், ஆனால் வாழ்க்கையில் எந்த அனுகூலங்களுக்கும் அப்பாற்பட்டு மேட்டுக்குடி ஒழுக்கவாதங்களில் இருந்து விலகி நின்று சமகால அரசியலை தன் புரிந்தலுக்குட்பட்டு வரைகிறவர் பலா...... முதல் தலைமுறை கார்டூனிஸ்ட்.....தனது கோடுகளைத் தவிற கொண்டாடும் எந்த பின் புலமும் இல்லாதவர். பாலாவின் கார்டூன்கள் நமது அரசியல் முரண்களுக்கு அப்பாற்பட்டு எல்லா முற்போக்கு சக்திகளுக்கும் பயன்பட்டு வருகிற நிலையில் கோவையில் இருந்து படம் வரையும் பாலா தன் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது பெயருக்கு முன்னால் வேறு அடைமொழிகள் எதையாது போட்டுக் கொள்ளலாம். இது ஒன்றும் சிரமம் அல்ல. இது தொடர்பாக பாரதிதம்பி உணர்த்தியதற்கு அவரிடம் எந்த ரெஸ்பான்சும் இல்லை. இது தொடர்பாக பாலா சில மெயில்களை அனுப்பி பணிவோடு கேட்டுக் கொண்ட போதும் அதற்கும் பாலா எந்த விதமான பதிலையும் அளிக்கவில்லை. ஒரு எளிய படைப்பாளியின் மன உணர்வைப் புரிந்து கொள்ள முடியாத பாலவின் மன உணர்வை எப்படி நாம் எதிர்கொள்வதென்று தெரியவில்லை. இதை எல்லாம் கண்டு கொள்ள வேண்டாம் என்றால்.அந்தத் திமிர் எங்கிருந்து வருகிறது. அந்தத் திமிரை எது கொடுக்கிறது. என்பதையும் நாம் இங்கே நினைத்துப் பார்க்க வேண்டும்.

கோவை பாலா ஓவியங்கள் என்று போடும் படங்கள் நண்பரும் கார்டூனிஸ்ட் பாலாவின் கார்டூன்களுக்கு பக்கத்தில் கூட வராது. ஆமாம் நான் சமகாலத்தில் எதிர்கொள்ளும் எல்லா பிரச்சனைகளிலும் பாலாவின் கோடுகள் இருக்கின்றன இதை விட வேறென்ன வேண்டும். பாலா உங்கள் பெயரை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள். அல்லது உங்கள் பெயரோடு வேறு ஒன்றைச் சேர்த்துக் கொள்ளுங்கள். இது என்னுடைய பணிவான வேண்டுகோள்.

டி.அருள் எழிலன்.

(இனி பலாவின் குமுறல்)

பெயர் என்பது ஒரு படைப்பாளிக்கு மிக முக்கியம். ஒரே துறையில், ஒரே பெயரில் இரண்டு படைப்பாளிகள் இயங்குவது என்பது வீணான குழப்பத்தை உருவாக்க கூடியது. அதுவும் ஒரு துறையில் தீவிரமாக ஒருவர் இயங்கி கொண்டிருக்கும் போது, புதிதாக அந்த துறைக்கு வருபவரும் அதே பெயரை பயன் படுத்தி இயங்குவது என்பது நோகாமல் நொங்கு சாப்பிட நினைப்பது போன்றதாகும்.

கோவை பால சுப்பிரமணியனும் அந்த வகையை சார்ந்தவராகத்தான் இருப்பார் என தோன்றுகிறது. பாலா என்ற பெயரில் ஒருவர் படங்கள் வரைகிறார், கையெழுத்தும் கூட கிட்டத்தட்ட உங்களது போன்றே உள்ளது என நண்பர் ஒருவர் தெரிவித்திருந்தார். உடனடியாக அவரது படங்களை பார்த்துவிட்டு, பாலசுப்பிரமணியத்துக்கும் தொடர்ச்சியாக பயிற்சி எடுங்கள் என்று வாழ்த்து கூறிவிட்டு, ஒரே பெயரில் இரண்டு படைப்பாளிகள் இயங்குவது நல்லதல்ல. உங்கள் பெயரில் கூடுதலாக எதாவது சேர்த்து கொள்ளுங்கள் என மெயில் அனுப்பியிருந்தேன். ஆனால் இன்று வரை அதற்கு பதில் அனுப்பாததோடு, பாலா பெயரில் ஒரு புத்தகம் போட்டு விட்டு அதை தனது திறமை மூலம் ஹிந்துவிலும் கட்டுரையாக வர வைத்ததைப் பார்த்து பிரமிச்சிட்டேன்..

தம்பி பாலசுப்பிரமணியத்துக்கு.. உங்கள் படங்களை பார்க்கையில் உங்கள் இலக்கு சினிமாவாக தான் இருக்க கூடும் என நினைக்கிறேன். இந்தியாவில் கார்ட்டூனிஸ்ட்டுகள் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளது. அதனால் புதிதாக ஒருவர் வருவது மகிழ்ச்சி.. ஆனால் அந்த வருகை அடுத்தவர் பெயரை திருடிக்கொண்டு வருவதல்ல.. என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் வளர வாழ்த்துகள்.

பாலா.

1 comment:

  1. whoever this arul ezhil is... jumping to conclusions is not the right answer dear.

    the very fact that my friend bala has published this in the blog shows where you stand. people will judge your quality. it is easy to accuse someone, the tongue is such an unique instrument. but people dont realise.

    humiliation is a part of life, it only makes you stronger. especially when u were blamed for something that was completely not your intentions. I've seen bala start from scratch, i know his inspirations and aspirations. so what if he is an amateur? it is the human quality that counts and my friend possesses that.

    its so silly to say that he copies, disney and pixar make the same kind of animations, bangladesh and japan have similar flag patterns... besides there are a lot of balas who would sign in the same way. good lord...

    i would personally vouch for bala and stand by his side because i know him. he would never dream of taking a short cut to fame. again who cares about what the world says. being true to yourself is what counts.

    good luck bala.... i pity those people who are unable to realize the truth...

    ReplyDelete