நான் எப்போதும் ரஜினி ரசிகன் என்று சொல்லி கொள்ள பெருமை கொள்வேன். தற்போது அதை நினைத்து மேலும் பெருமிதம் கொள்கிறேன்! எந்திரன் திரைப்படம் - பிரம்மாண்டம், வித்தியாசம், நேர்த்தி, கடின உழைப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக இது ஒரு புது அனுபவம் என்று சொல்வேன்
"ரஜினி ரசிகன் தானே... அவர பத்தி சும்மா ஏத்தி தான் விடுவான் இந்த பைய!" என்று நினைக்காதீர். நிஜமாகவே இதில் உள்ள நல்ல விஷயம், தடுமாறி போன விஷயங்கள் குறித்து சிறு குறிப்பு வரைந்துள்ளேன்.
திரையரங்கின் வெளியே, ரசிகன் என்ற பெயரில் கோமாளித்தனம், பைத்தியக்காரத்தனம் செய்யும் கிறுக்கர்களை மனதிலிருந்து நீக்கி விட்டு, நாம் ஒரு சாதாரண மனிதனாய் இப்படம் பார்ப்போம்.
திரைப்படம் காண முதல் நாளே சென்றிருந்தேன். திரையரங்கு வெளியே செல்லும் பேருந்து, வாகனங்கள் ஓட்டுபவர்கள்; அதில் பயணிப்பவர் கண்கள் எல்லாம் அந்த திரையரங்கின் மீதே இருந்தது. மக்கள் வெள்ளமே எங்கும் நிறைந்து வழிந்திருந்தது. ரசிகர்கள், எளிய மக்கள், சிறார்கள், இளையோர்கள், முதியோர் என்று திரையரங்கு திருவிழா கோலம் பூண்டிருந்தது. எல்லார் கண்களிலும் மகிழ்ச்சி.
"என்ன இருக்கும் படத்துல?", "தலைவர் என்ன புது ஸ்டைல் பண்ணியிருப்பார்?", என்று பல பல கேள்விகள் அங்குமிங்கும் கேட்டுக் கொண்டே இருந்தது!
திரையரங்கினுள் சென்று அமர்ந்தேன். முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை ரசித்தேன். இது நிச்சயம் இந்திய திரையுலகிற்கு புதிய படம் தான்.
இப்படத்தில் நான் ரசித்த ஓர் விஷயம். படத்தில் உள்ள CG Works கதையுடன் சரிவர கலந்துள்ளது என்பேன். இதற்கு முன்னால் வந்த திரைப்படங்களில் CG Works கதையோடு ஒட்டாமல் தொங்கும், தொய்வும் ஏற்படுத்தும். அந்த அளவிற்கான Perfection இது வரை யாராலும் கொடுக்க முடியவில்லை என்பது உண்மையே. இப்படத்தில் தொழில்நுட்பம் அழகாய் படத்திற்கு கை கொடுத்துள்ளது. அது மக்கள் விரும்பும் வண்ணம் அமைந்துள்ளது. The Techniques are well merged with the aesthetic nature of the film, coupling with a fully packed energetic entertainment aspects.
நம் வீட்டு சிறு பிள்ளைகள் கேலி செய்யும் வண்ண கிராபிக்ஸ் இதில் இல்லை. மொத்த இந்திய திரையுலகமும் ஒரு முறை திரும்பி பார்க்கிறது இந்த படத்தை! இப்படத்தின் வழி இந்திய படங்கள் என்றாலே, ஹிந்தி திரைப்படங்கள் தான் என்ற எண்ணம் உடையும் என நம்புகிறேண். வடக்கில் எந்த பெரிய இயக்குநரும் தயாரிப்பாளரும் சேர்ந்து செய்யாத புதுமை இந்த படம்!
இது ஒரு கற்பனை கதை. இனி இது போன்ற ரோபோகள் காலம் வரலாம். சுஜாதா எனும் மனிதனின் மூளையை நினைந்து வியக்கிறேன். இப்படி ஒரு கதை எழுதிய அந்த மாமேதையை நாம் நிச்சயம் நினைவு கூற வேண்டும். இப்படம் எடுக்கும் முன் ரோபோடிக்ஸ் எனும் பெரும் சாகரத்தில் முங்கி எழல் அவசியம்! அதை சுஜாதா சரியாக செய்துள்ளார். ஷங்கர், சுஜாதா அமைத்து தந்த வழிதடம் வழி தெளிவாய் பயணித்துள்ளார். இருப்பினும், திரைக்கதை சில இடங்களில் அடி வாங்கியுள்ளது. ஆனால் ஷங்கர் ரோபோகள் பற்றிய விரிவான ஆராய்ச்சிக்கு பிறகே இப்படம் செய்துள்ளார் என்பது உறுதி. இதுப் போன்ற கதை கையாளும் போது ஒரு இயக்குநருக்கு மிக அவசியமான ஒன்று - பொறுமை. அது ஷங்கர் இப்படத்தின் மூலம் பெற்றிருப்பார் என நம்புகிறேன்ஷங்கர், ரஜினி கலவை சேரும் போது எதிர்ப்பார்ப்பு அதிகரிக்கும். அந்த எதிர்ப்பார்ப்புகள் எல்லாவற்றையும் இந்த கூட்டணி நிறைவேற்றியுள்ளது. ரஜினிக்கான ஸ்டைல், Punch Dialogues, அனல் பறக்கும் வசனங்கள் எதுவுமின்றி, வெறும் ஒரு ஜடமாய், பிறர் கூறும் கட்டளைகள் கேட்டு நடக்கும் ஒரு ரோபோவாய் அவரை நடிக்க வைக்க ஒரு 'தில்' வேண்டும். அது ஷங்கருக்கே சொந்தம்! பாடல் வெளியீட்டு விழாவில் சொன்னது போல ரஜினி - இயக்குநரின் நடிகனாக இப்படத்தில் வலம் வந்துள்ளார்.
"இதிலே டான்ஸ், ஆக்ஷன் எல்லாம் டூப்பாமா... ஹி! ஹி! ஹி!" என்று சிரிக்கும் உதடுகளுக்கு பதில் இதோ. நண்பா! ரஜினி குமரன் அல்ல. வயது முதிர்ந்த மனிதன். அவரால் சத்தியமாக இதுப் போன்ற காட்சிகள் செய்ய சாத்தியமில்லை. அப்படியே டூப் போட்டாலும் அதை மக்கள் பார்த்து ரசித்தது ரஜினி முகம் கொண்டதாலேயே! :-)இப்படம் இங்கிருக்கும் இளைய நடிகர்கள் செய்திருந்தால், ரஜினியை விட பல மடங்கு உழைத்து செம்மையாக நடித்து காட்டியிருக்க முடியும். ஆனால் அந்த முதியவர் அவர் வயதிருக்கு இப்படம் செய்ததே பெரிய விஷயம் தான்! நடிப்பில் தன் பரிமாணங்களை காட்டியுள்ளார். இதற்கு கண்டிப்பாக HomeWork என்று சொல்ல படும் விஷயம் நிச்சயம் அவர் செய்திருக்க வேண்டும். வில்லனாகவும் நல்லவனாகவும் நடித்து அசத்திய சூப்பர் ஸ்டார் திரையில் வெகு ஜோராய் ஜொலித்துள்ளார்
படத்தின் முதல் பாதியே அசத்தல் என்றால், பிற்பாதி ஆச்சரியம்! இந்த அதீத கற்பனை கதையின் இறுதிக் கட்டம், அற்புத்ம்! இதுப் போன்ற காட்சி அமைப்புகள் இங்கு ஷங்கரால் மட்டும் தான் முடியும். கதைக்கு தேவையான பிரம்மாண்டம் இதில் சரிவர கலந்துள்ளார் இயக்குநர்"பாஸ்! கிளைமாக்ஸ் Bore! இழுத்துட்டாங்க!"என்று சொன்னார் நண்பர். அழிவின் உச்சம் அந்த ரோபோ. அது எல்லா வல்லமையும் பெற்றுள்ளது. நூறு மனிதன் செய்யும் வேலையை ஒரே ரோபோ செய்யும் என்றால், அதே போல் ஒராயிரம் ரோபோகள் வந்தால்? அவைகள் ஒன்று சேர்ந்து மனிதனை தாக்கினால்? அவைகளை அழிக்கும் படலம் சுலபம் அல்ல! அது தான் இப்படத்தின் இறுதிக் கட்டம்
'இசைப் புயல்' ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பாடல்கள் எல்லாமே அழகு. பின்ணனி இசையில் புது தரத்தை முன் நிறுத்தியுள்ளார். His orchestrational skills are very well famous to us. And this film is yet another example for it!இப்படத்தை நம் சராசரி வாழ்க்கை தரத்தோடு ஒப்பிடுவது முட்டாள்தனம். முன்னரே சொன்னது போல இது ஒரு கற்பனை கதை. அதில் உள்ள புதுமைகளை ரசிப்போம். ஒரு அன்பர் சொன்னார், "நம்ம இந்தியாவோட லைஃப் ஸ்டைல் இதிலே சரியா காட்டல!" என்று, எனக்கு சிரிப்புதான் வந்தது!
'அங்காடி தெரு' போன்ற படங்கள் யதார்த்தம் சார்ந்தவை (REALISM or Reality Based). 'எந்திரன்' போன்ற படங்கள் ஓர் கற்பனையை சார்ந்தவை (FICITIONAL or Imagination Based). இதை நாம் தெளிவாய் புரிந்து கொள்ள வேண்டும். கற்பனை படங்களில், திரைப்பட அறிவு ஜீவிகள் சொல்லும் 'லாஜிக்' தேவையில்லை. உங்கள் கவலைகள் மறந்து, எந்திரன் திரையரங்கினுள் செல்லுங்கள்.கொடுத்த பணத்திற்கு லாபம் பார்க்கும் கூட்டத்திற்கு சொல்கிறேன், "நீங்க செலவழிச்ச பணம் வீண் போகாது பாஸ்!". ரசிகனாய் மட்டும் செல்லும் கூட்டத்திற்கு சொல்கிறேன், "உங்கள் ரசனைக்கு நல்ல விருந்து இந்த படம்!"
இப்படத்திற்கு சரிவர கை கொடுத்து செதுக்கிய பிற வல்லுநர்கள் - ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, கலை இயக்குநர் சாபு சிரில், ஒலிப்பதிவாளர் ரெசுல் பூக்குட்டி, நடன இயக்குநர்கள், சண்டை பயிற்சியாளர்கள், கிராபிக்ஸ் வல்லுநர்கள், என்று இன்னும் பலர். அனைவரின் ஒட்டு மொத்த உழைப்பே இந்த திரைப்படம். இனி இப்படி ஒரு படம் தமிழ் திரையுலகில் எடுக்க வேண்டுமெனில் மூன்று கம்பெனிகளாவது ஒன்று சேர வேண்டும்.Graphical Techniques இல் ஆங்கிலத்தில் கலக்கிய எந்த படத்தையும் மிஞ்சி விடவில்லை 'எந்திரன்'. இருப்பினும் அவர்கள் தரத்திற்கும், படங்களின் தன்மைக்கும் நாம் எந்த விதத்திலும் குறைந்து போய்விடவில்லை என்ற நிலையை இப்படம் நமக்கு உணர்த்தியுள்ளது
WARNING & GREETING:
இப்படத்தை எல்லோரும் கண்டுகளிக்கலாம். யார் யார் இப்படத்தை பார்க்க கூடாதென்றால், ரஜினியை வெறுப்போர், ஷங்கரை வெறுப்போர், கலாநிதி மாறனை வெறுப்போர், கமர்ஷியல் சினிமா என்று மாய வட்டம் கட்டிய கூட்டம் (எல்லா சினிமாவும் காசுக்காக தானே! யாரும் தொண்டு செய்ய இங்கு படமெடுப்பதில்லையே!). ஏன் இவர்கள் பார்க்க கூடாது (அல்லது வேண்டாம்) என்றால், ஏற்கனவே வெறுப்பும் வெட்டி நகைப்பும் கொண்டு இவர்கள் திரையரங்கினுள் சென்றால், அது இவர்கள் கொடுத்த பணத்திற்கும் நஷ்டம், படத்தை ரசிக்க வந்த மற்ற கூட்டத்திற்கும் கஷ்டம்!
- பி சி பாலசுப்பிரமணியம்
No comments:
Post a Comment