Tuesday, August 31, 2010

Match-Fixing Scandal Rises Again!

Multi-talented Chandrababu




















Chandrababu's eloquence in MADRAS BHASHAI, a dialect unique to the lower socio-economic status, was incomparable for a long time until Kamal Haasan could do it, a couple of decades later.

Sunday, August 29, 2010

Click, The Short Film

இறைவா.... இறைவா....















கீழே கொடுக்கபட்டுள்ள புகைப்படத்தில் ஓர் முக்கியதுவம் இருக்கிறது.
கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்!
You can find a very important thing in the below mentioned photograph. Find it!

மழை - தேநீர் - குளிர் - காதல் - கூடல்

மழையினைப் பற்றி

ான் எழுதியதெல்லாம் தேன் அடி;

ானே அவளை இன்று வெறுத்தேனடி!

மறைக்காமல் காரணத்தையும் கூறுகிறேன்... கேளடி!


மழ அவள் மட்டும் வருவதோடு நில்லாமல்

மயங்கி உறங்கிட செய்யும் குளிர்த் தோழியுடன் வந்தாள்

என் மங்கை அவள் கண்கள்

எழ மறுத்தது - அவள் உதடுகளும் சிவந்திருந்தது!


என்னவள் மூச்சுக்காற்றினில் நெகிழ்ந்திருக்கும்

தலையனை அருகில் அமர்ந்தேன்.

என்னவள் சோம்பலை விலக்கத் தேநீருடன்...

ிரை பின் நின்ற கடவுளை காண

அவாவுடன் நின்ற பக்தனை போலே...


ெவ்விதழ்கள் மெல்ல விரித்த

ெங்காந்தள் மலரெனப் பூத்திருந்தாள்;

என் முகமெங்கும் புன்னகைப் பூ

என்னைக் கண்ட அவள் கண்களிலோ வெட்கப் பூ!

ுளிரென்ற தீயினை அணையாது

அணைத்தே அத்தீயினை மேலும் வளர்த்தோம்...


- பாலா

ஜனரஞ்சக காமெடியென்! ஜனகராஜ் - Comedian Janagaraj

Friday, August 27, 2010

Mahakavi Subramaniya Bharathi - மகாகவி சுப்பிரமணிய பாரதி




















சுற்றும் விழி சுடர் தான் கண்ணம்மா...
சூரிய சந்திரரோ....

எட்டயபுர கவிக்கு...

ித்தம் தன்னைச் செதுக்கியவன்;

ீங்கா துன்பமதில் அடைப்பட்டிருப்பினும்

ீள் வானத்தை ரசிக்க மறக்காதவன்;

ிலம் புலம் வழி பிரிவினை வெறுத்தவன்;


ன்னுள் கண்டான் நல்லதோர் வீணையை...

ானே அதனை மீட்டி

தனக்கான பெருமித உணர்வில் மூழ்கவில்லை அவன்;

ானே இயங்கும் உலகிற்கும்

ாயென நின்ற பராசக்தியையும் மற்றுமுள்ள

ானிய தாவிரங்களையும் பாடினான்;


அவன்! இவன்! என்ற சொற்கள்

அகந்தையினால் எழுந்தது அல்ல;

அவன்... இப்பாட்டுடை தலைவன்!

அந்நியன் அல்ல;

அடுத்த வீட்டினுள் இருப்பவன் அல்ல;

அன்றாடம் என் மனதினுள் வாழ்பவன்!

... ... என கற்க ஆரம்பித்த நாள் முதல்

அனுதினம் பாட நூலினில்

அறுபட முடியாத நூலென திகழ்பவன்!


ஆழபெருங்கடல் மீனினத்திற்குத் தோழனே!

ஆடிப்பாடி நீந்தி மகிழத் தந்துள்ளதே இடம்!!

ஆவல் அதிகம் என்னுள் உண்டாக்கியவன் இவனே…

ஆணித்தரமான எண்ணங்கள் பல என்னுள் கொணர்ந்தவனும் இவனே…

ஆகையினாலே இவன் எமக்கு உற்ற தோழனாவான்!!


ிந்தை கெட்டா

ிந்தை சாதனை எதுவும் புரியவில்லை இவன்

ிறப்பான

ிந்தைக்கெட்ட கூடிய

ிழிப்பூட்டும் கவிதைகளையே இயற்றினான்!

ிரல் நுனி கொண்ட பேனாவால் இவனும் சாதனையாளனே!


ண்ணனைப் பாடினான் - உடன்

ர்த்தரையும் துதித்தான்

கடவுளென்று கூறி இவனை வேற்றுமைக்குள்ளாக்க வேண்டாம்

கனிமவள அதிசயங்கள் பலதுமுள்ள இவ்வுலகில்

கணக்கில் எடுக்கப்படாத ஓர் அதிசயம் இவன்!

இவனை மகாகவி என்றழைப்பர்.


- -பாலா

Thursday, August 26, 2010

பெண் என்பவள்...

வனிதையர் பலர்
வன்மையுள்ளோர்!
திண்மையுள்ளோர்!
திங்களுக்கு ஒப்பானோர்!

கொஞ்சி விளையாடும்
மென்குரலுடையாள்,
கெஞ்சி பேசும்
ஆண் மடையர்கள்...
மிஞ்சி அவளிடம் பழகினாலும்
தன் நிலை தவறாதவள்!

காஞ்சிப் பட்டென மிளிர்ந்தாலும்
கண்காட்சியிலே எளிமையாள் அவள்!
செஞ்சிக் கோட்டையின் வலிமையும்
ஒன்றா நெஞ்சுரம் உடையாள் அவள்!

வஞ்சி அவள் நெஞ்சம்
என்ன உரைத்தாலும்
எல்லென ஜொலிக்கும்!
தருக்குண்டாக்க செய்யும்
தன் குலப் பெண்களுக்கு!

ChanDRAW Sir! A Very Good Cartoonist!

Wednesday, August 25, 2010

Gautham Vasudev Menon, Film Director

Cinematographer V.Manikandan




















Raavanan
Billu
Om Shanti Om
Police
Anniyan
Main Hoon Na
Kuch Naa Kaho
Pennin Manathai Thottu
Asura Vamsam
Mr. Romeo
Sengottai
Sarigamapathani
Atharmam
fame....
Cinematographer V.Manikandan
I wish to work with him!
:-)

Tuesday, August 24, 2010

The Director who has that MIDAS TOUCH!




















Kanchivaram,
Thenmaavin Kombathu,
Kala Pani,
Minnaram,
Midhunam,
Kilukkam,
Mazha Peyennu Mathalam Kottunu
Thaalavattam,
Aram+Aram = Kinnaram
and many many creations.....
From
Director Priyadarshan

குருவி வழிச் செய்தி

ுறுதுறுவென்றசையும் கழுத்து

ாண்போரை கவர்ந்திழுக்கும் கண்கள்

தூரல் மழைத்துளி பேச்சு

ண்மணியாம் என் சிட்டுக்குருவி!

என் வீட்டினிலே

அழகிய கூட்டினிலே

எழில் மகள் அவள் வேண்டியன

அனைத்தையும் அளித்தேன்

எண்ணற்ற அவள் முத்து பேச்சினை ரசித்தேன்!

அனுதினம் அவள் கொஞ்சல்களில் மெய் மறந்தேன்!

ஒரு நாள்...

அழகிய மாலைப் பொழுதினிலே

அவள் என் கவனத்தை ஈர்த்தாள்

"என்னடி கண்மணி?" என கேட்டேன்

"எனக்கென்று விடுதலை?" என்றாள் அவள்

ஒரு கனம் இருவரும் மெளனத்தில் ஆழ்ந்தோம்

ன் என்பது போல்

என் விழிகள் அவளை நோக்கியது

ஏக்கம் நிறைய வழிந்திருந்தது

என் கண்மணியின் விழிகளில்...


"சென்று வா... என் கண்ணே!" என்று

ெவ்வானிலே பறக்க விட்டேன்

"மேக குவியல்களுக்கிடையே

மெதுவாய் செல்லடி!

கடும்பாறை நிறைந்த மலை உச்சியிலே

கழுக்கிருப்பான் கவனம் கொள்ளடி!

வேங்கையாம் சிங்கம் உடன் பதுங்கி பாயும் புலி

வேடுவர் கூட்டமிருக்கும் பார்த்தடி கண்மணியே!!"

ிட்டு சென்றவளுக்காக

ிழியில் நீர் கசிந்தேன்...

பல இரவும் பொழுதும்

கடந்தோடிப் போனது

பனி நிறைந்த நாளன்று

ாலைப் பொழுதினிலே

படுக்கையிலிருந்து எழுந்ததும்

ாதில் விழுந்தது ஓர் அழகிய குரல்

என் வீட்டைப் பல நாள் அலங்கரித்த குரல்

மீண்டும் என் இதயத்தை நனைத்தது...

எழுந்து தாழிட்ட ஜன்னல்களைத் திறந்தேன்

மீள குளிரில் நடுங்கி நின்றிருந்தாள் என் கண்மணி

"என்னாயிற்றடி!" என்றள்ளியணைத்தேன்


ர்ண விளையாட்டில்லா ஓவியமாய்

வாடியிருந்த அவள் கண்கள் ஒளியிழந்திருந்தது

ஏனிந்த வாட்டம் என்ற கேள்வியை முன்வைத்தேன்.


ண்ணீர் துளி

கடந்த வழிந்தோடி வந்தது அவளிடமிருந்து...

"இவ்வையம் முழுதும் பறந்தேன்;

இன்னல்களே எங்கும் சுழல கண்டேன்

அய்யோ! இனவெறியாட்டம் நிறைந்த

அரபியக் கண்டத்தை கடந்தேன்...

அங்கு திராட்சை தோட்டங்களில்லை!

அமைதி நிலவும் வாழ்வுமில்லை!

கருப்புடையில் சுற்றித் திரியும் பெண் வண்டுகளின்

கற்பு கேள்வி குறியானது வெள்ளை நாகங்களால்...

எலும்புகளும் சதைகளுமாய்

எண்ணிலடங்கா சடலங்கள்!"

ுருதி குளமாய் மாறிப் போனது உலகம்!

ுணம் மனம் உணர்ந்து

ஆதிமனிதன் வளர்ந்துயர்ந்த

ஆப்பிரிக்க கண்டம் நிலை கண்டு உருகியே போனேன்!

ஒருவேளை சோறின்றி சோர்வாய் போன

ஒன்றுமறியா மக்களின் உடல்...

வஞ்சகர்க்கு சோதனை களமானது!

ாகரீக வளர்ச்சியென்ற போர்வையில்

ாம் யார் என்ற எண்ணமிழந்து

ாளும் குழப்பஸ் சேற்றில் தத்தளித்து

ன்மை மறந்து நடமாடும் மேற்கத்திய மக்களை வெறுத்தேன்!

இயற்கையினை மதியாது

இன்றைய மனிதன் போடும் ஆட்டங்கள்...

இறைவனே நேரில் இறங்கி வந்தாலும்

இடைவேளை கேட்டுத் தப்பித்து செல்வானவன்!


உலகை ரசிக்கும் எண்ணத்தை

உடனே களைந்தேன்!

உயிரினை பாதுகாத்து

உற்றவர்! ப்ரியர்!

உங்கள் கரம் பற்றி வாழ்வதே

உன்னதமென்று நினைவில் கொண்டு

உங்களை அடைந்தேன்!

என் உதடுகள் உதிர்த்த புன்னகை

என் கண்மணிக்கு நானளித்த விடை

ாட்டங்களையெல்லாம் களைந்து

ிரைந்து சிறகடித்து என் தோள் சேர்ந்தாள்!


-'கவிதை குளமதில் மீண்டும் ஓர் கல்' என்ற என் முதல் கவிதை புத்தகதிலிருந்து ஓர் கவிதை.

திராவிட மாடல்!