Thursday, September 30, 2010

சிவாஜி கணேசன் அவர்கள்




















"வாழ்க்கை பாதையிலே
சர்வ சாதாரணமாய்
தென்பட கூடிய ஜீவன் தான் நான்!"

வரும்... ஆனா வராது! வந்தும் இப்பிடிதான் இருக்கு!




































At Last!



At Last!

Versions of The Verdict!

Veerappan, A Try during College Days.

:-)

ஒரு கும்பல்
அந்த முகத்தின் மீது அசிங்கத்தை தெளிக்கிறது.
பின்,
அந்த முகத்தை கொண்டே தன் வாழ்க்கையையும் நடத்துகிறது!

வேடிக்கை!

... ஆனால் இதுதான் இங்கு வாடிக்கை!!

- வஞ்சப் புகழ்ச்சி அணி

Wednesday, September 29, 2010

Lalit Modi's Isolation from his dear IPL

PUNCTUAL PUNCHwells!

நம்ம லட்சணம்!

கவனம் தேவை!

அக்கண்கள்

அன்பும்

அக்கறையும் பொழிந்தன

ஆனால் உதடுகள் உதிர்த்ததோ - பவஸ்துதியை!

அந்த கண்கள் போலியானவை

அவைகள் நாடகமாடும் விதம் - அழகு!

அற்புதம்!!

அருமை!!!

அதன் மயக்கும் வார்த்தைகளில்

அசட்டுத்தனமாய் சொக்கி போக போவதில்லை நானென்று தெரிந்தும்

அசராமல்

அணிகலனாய் பல பவஸ்துதிகள்!

அது சொன்ன வார்த்தகைள் போல் நான் கூட யோசித்திருக்க மாட்டேன்

அகண்ட இப்பூமியில் சறுக்கி விழ வாய்ப்புகள் ஏராளம்

அனுதினம் கவனம் கொள்ள வேண்டும்!

அவ்வுதடுகள் உதிர்த்த பவஸ்துதிக்கு என் பதில்......

அவ்வுதட்டை வர்ணித்தே பதில் பவஸ்துதிதான்!

:-)

Monday, September 27, 2010

கவனமாக கவனியுங்கள்!

உணர்வாரோ? அல்லது உதறி தள்ளுவாரோ?

















அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் அவரவர் பலத்தை காட்ட மாநாடுகள் போராட்டங்கள் என பலவும் நடத்துகின்றனர்.
இதில் சராசரி மக்களின் தினசரி வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகிறது என்பதை எத்தனை கட்சிகள் உணர்கின்றன?

Monday, September 20, 2010

பிரிந்தவர்கள் இணைந்தால்.... மகிழ்ச்சியே மிஞ்சும்!












Aanantha Vikatan News.

வெற்றியும் தோல்வியும்





















Let the Hunt begin! - நடக்கட்டும் வேட்டை!




















11 postmen held for taking unauthorized commission from Old Age Pension of Senior Citizens

தந்தை பெரியார்

ராவணன் - எளிய விமர்சனம்

ஒரு வடக்கன் வீரகதா

ராவணன் படம் பார்த்தவுடன், முன்பு கேரளாவில் மம்மூட்டி நடித்து வெளியான பட மான 'ஒரு வடக்கன் வீரகதா' தான் ஞாபகம் வந்தது. அதில் 'சந்து' எனும் கதாபாத்திரத்தில் தான் மம்மூட்டி நடித்திருப்பார். பல விருதுகளை தனக்காய் அவர் சொந்தமாக்கி கொண்ட படமது! அந்த படம் கேரள மக்களின் மனதில் ஒரு சிறு பொறி கிளப்பி விட்டது!


ஹரிஹரன் இயக்கி, எம் டி வாசுதேவன் நாயர் கதை எழுதிய திரைக் காவியம் அது! இதில் வரும் சந்து எனும் கதாபாத்திரம், வரலாற்று சுவடுகளின் படி சகுனியை போன்றவன், தீயவன், அவனுக்கு அன்று வாழ்ந்த மனிதர்கள் இட்ட பெயர் 'சதியன் சந்து' - அதாவது சதிகார சந்து! அதே கதையும் அதே கதாபாத்திரங்களையும் கொண்டு, இயக்கிய படம் தான் 'ஒரு வடக்கன் வீரகதா'. சந்துவின் தரப்பு நியாயங்களை, அவனது அப்பழுக்கற்ற நல்ல தன்மையை சித்தரித்தது இந்த படம்.


சந்து - சதிகாரன் அல்ல! என்று மக்கள் முகத்தில் அது நீர் தெளித்தது. அந்த படம் வெளியாகும் வரை கேரளாவில் ஒரு வழக்கம் இருந்தது. ஏமாற்றுபவர்களை அசிங்க படுத்த, கலங்க படுத்த உபயோகித்த பெயர் தான் ‘சந்து’. இந்த படம் வெளியானதிலிருந்து அந்த வழக்கம் காணாமல் போனது! அதன் பிறகு சந்துவை யாரும் வில்லனாக சித்தரிக்க வில்லை.


அதேபோல் தான் ராவணன். இதற்கு முன்னால் இந்த கதையம்சம் கொண்டு இப்படி ஒரு படம் வெளிவரவில்லை என்று நினைக்கிறேன். I ll define it as a DARING ATTEMPT! கமல் ஹாசன் அவர்கள் நடித்த 'குணா' திரைப்படம், ஏறக்குறைய இதே போன்ற கதை அம்சம் கொண்டதுதான். இப்படி ஒரு படத்தை அன்றே நடித்து காட்டி அசத்தியவர் கமல்! அதன் பின் 'காதல் கொண்டேன்'. இப்போது 'ராவணன்'.


'ராமாயணம்' எனும் மிகப் பெரும் சாகரத்தை மூன்று மணி நேரத் திரைப்படமாய் எடுத்தியம்புவது கடினம்! அது மெகா சீரியலாக Doordarshan ல் வந்தது நாம் அறிவோம். அதன் சாராம்சம் கொண்டு, தன்னுடைய கண்ணோட்டத்தை (View) அதில் செலுத்தி, படமாய் அதை தயாரித்து இயக்கி, பெரிய திரையில் ஓட விடுவது என்பது கஷ்டம். அதுவும் இந்து மதம் கோலோச்சியிருக்கும், ராமாயணம் எனும் புராணம் மனப்பாடமாயிருக்கும் நம் இந்தியாவில் இந்த படம் எடுப்பது மகா கஷ்டம்!


எத்தனையோ வருடங்களாக ராவணன் தீயவன், அசுர சக்தி, சீதையை அபகரித்தவன், மனித குலத்திற்கே இவன் எமன் என்றெல்லாம் கூறி வந்த நாவு நம்முடையது. ராமன் பக்கமிருந்துதான் ராமாயணம் இயற்றி உள்ளனர். ராவணன் பக்கம் கம்பன் இருந்திருந்தால், ராமாயணத்தை விட வித்தியாசமான ருசிகரமான ஒரு காவியத்தை நாம் பெற்றிருக்கலாமோ என்னவோ...

சரி! இப்போது ராவணன் பக்கம்தான் மணி சார் இருக்கிறாரே! அப்படி அவர் உருவாக்கிய ஒரு புது காவியம் தான் 'ராவணன்'.


இது ஒரு தீவிரவாதியை நியாயப்படுத்துற முயற்சி!

ஏன் தீவிரவாதி உருவாக வேண்டும்? உங்களை போலதான், என்னை போலதான் அவனும் பிறந்திருப்பான். பிறகு நாம் எப்படி நியாயவாதி கூட்டத்தில் சேர்ந்தோம்? அவன் மட்டும் எப்படி தீவிரவாதி என்ற வட்டத்திற்குள் வீழ்ந்திருப்பான்?


தீவிரவாதி என்று ஒருவன் உருவாக காரணம் - அவனையோ அவன் சொந்தங்களையோ தொட்டு விளையாடும் பலம் படைத்த கும்பலை எதிர்த்து போராடவும், தாக்கு பிடிக்கவும், தன் சொந்தங்களை காக்கவும் தான்.

ஒசாமா பின் லேடன் - ஒரு சிறந்த பொறியியல் வல்லுநராய் பல நாடுகள் சுற்றி திரிந்து பணம் பல சேர்த்திருக்கலாம். ஆனால் அவர் நாட்டு பெண்களின் மானத்தோடு வெளிநாட்டு வெள்ளையன் விளையாடினால், அதை கண்டும் காணாமல் போவது எப்படி? அங்கு அகிம்சை எல்லாம் செல்லுபடி ஆகாது. எடுத்தான் ஆயுத்ததை! தன் நாட்டு நிலம் புலன்களை ஆக்கிரமித்து, திராட்சை பேரீச்சம் பழங்களுடன் தன் நாட்டு பெண்களை ருசித்து ரசிக்க இறங்கிய கயவர்களை எதிர்த்து எடுத்தான் ஆயுதம்! அவனுக்கு கிடைத்த பட்டம் தீவிரவாதி! ஒசாமா செய்தது எல்லாம் நியாயப் படுத்தவில்லை நான். தவறுகள் பலவும் செய்துள்ளார்! ஆனால் அதன் ஆரம்பம் இதுவே!


“எங்களுக்கு எங்களுக்கான பலன்களை கொடுங்கள்! நாங்களும் இந்நாட்டு மக்கள் தானே?” என்று கேட்டவனின் முகத்தில் லத்தி அறைந்தது. அதையும் தாண்டி பேசியதற்கு அவனுக்கும் அவனை சுற்றி உள்ளோரின் நெஞ்சிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அவனையும் எஞ்சியிருப்போரையும் காப்பாற்ற ஆயுதம் எடுத்தான் அந்த தீவிலே.. - சரித்திரத்தில் அவனுக்கு கிடைத்த பட்டம் - தீவிரவாதி!


இதேப்போல எண்ணற்ற கதைகள் இங்குண்டு! அப்படி ஒரு விஷயத்தைதான் மணி சார், ராவணன் படத்தில் கையாண்டுள்ளார். முன்பே கூறியது போலே, ஒரு மிகப் பெரிய புராணத்தை மூன்று மணி நேர திரைப்படமாய் எடுப்பது கடினம். "அதுதான் புராணமாச்சே! அதை ஏன் இவர் படமா எடுக்கணும்? வேற ஏதாவது யோசிச்சிருக்கலாம்! தேவையில்லாம...." என்று மெத்தனமாய் அடித்து விடும் ஆசாமிகளுக்கு சொல்கிறேன். இந்த படத்தை இவ்வளவு தைரியமாக, திரையில் வெளியிட இங்கே உறுதுணையாய் நல்ல தயாரிப்பாளர்கள் கிடைப்பார்களா என்பது கூட சந்தேகம் தான்! அதை தானே முயற்சித்தவர், மணி சார் தான்!


"பக்... பக்... பக்..."

"பக்... பக்... பக்...ன்னு சேவல் கோழி போல வீரா கதாப்பாத்திரம் கூவிக்கிட்டே இருக்கார்! ஒரே காமெடி! ஹி! ஹி! ஹி!" என்று அழகாய் கூட சிரிக்க தெரியாத ஒரு நண்பர் இதை சொல்லி சிரித்தார்.


'ஆளவந்தான்' என்ற படத்தில், "கடவுள் பாதி! மிருகம் பாதி!" என்ற பாடல் நாம் எல்லோரும் அறிவோம். அந்த பாடலின் ஆரம்பத்தில் ஒரு குரங்கினை போல் முகபாவணைகள் காட்டி, அதே போல் சப்தமெழுப்பி, அந்த கதாபாத்திரத்தை நாம் நம் இருக்கைகளிலிருந்து முன் சென்று பார்க்க வைத்தார் கமல். It’s the characteristic feature of that role called NANDU.

நந்து என்ற கதாபாத்திரத்தின் தன்மை குணங்கள் எல்லாம் குரங்கை போலதான்! அதை மிக நேர்த்தியாய் நடித்திருப்பார் கமல்!

நம்மிடம் யாராவது தேவையில்லாமல் அறிவுரை செய்தால் நாம் அவர்களை கிண்டல் செய்ய என்ன சப்தம் எழுப்புவோம்? ஒரு நாய் குலைப்பது போல் சப்தமெழுப்பியோ கூச்சலிட்டோ, அறிவுரை கூறுபவரை கேலி செய்வோம். இது பொதுவாக கல்லூரிகளில் நாம் பார்க்க முடியும் (முக்கியமாக கல்லூரி கலை விழாகளில்!)

அதுப்போல காடு, குடிசை, ஆடு, மாடு, கோழிகளுக்கு நடுவே வாழ்பவன் வீரா என்கிற வீரய்யன். அவன் மிக மெச்சப்பட்ட ஆங்கில மொழி சொற்பொழிவாற்ற முடியாது. தூய தமிழிலே நம்மை கிறங்கடிக்க செய்ய முடியாது!

வீரா எதிரே இருந்த ராகிணி கதாபாத்திரம், வீராவிடம் சொல்லும் ஒரு வசனம் இருக்கும். "ஞாபகம் வெச்சுக்கோ! உன் மரணம் என்னால தான்!" என்பாள். மரணத்திற்கெல்லாம் அஞ்சியவன் அல்ல வீரா. மரணம் பற்றி கூறி தன்னை பயமுறுத்த முயற்சிக்கும் ராகிணியை கேலி செய்ய வீரா, "பக்... பக்.... பக்..." என்பான்.


வீரா

அச்சம் தவிர்த்த அந்த கதாபாத்திரத்திற்கு மேலும் ஒரு நல்ல ஊட்டம் விக்ரம்! அபாரமான நடிப்பு! விக்ரம் என்ற நடிப்புலக திமிங்கலத்திற்கு இந்த படம் நல்ல தீனி. ஏனெனில், இந்தியில் தேவ் (ராமன்) ஆக நடித்து, பின் இங்கு ராவணனாய் நடித்து, இரு வேறு முகங்களும் காட்டி நம்மை கிறங்கடிக்க செய்த விக்ரம் நடிப்பு - பிரமாதம்! He has moulded himself into a more perfect professional actor!


மணி சார் பாணி

வழக்கமாய் மணிரத்னத்தின் படங்களில் வரும் சுவாரஸ்யமான, எதிர்ப்பார்க்க முடியா காட்சியமைப்புகள் இந்த படத்திலும் உண்டு. எல்லா பெண்கள் போல தான் ராகிணியும். துப்பாக்கி காட்டியவுடன் பயந்து நடுங்கி கூக்குரலிட்டு கதறுவாள். நிமிட நேரத்தில் சுட்டு தள்ளி விடலாம் என்று மனக்கணக்கு போட்டு வரும் வீராவிற்கு ஓர் அதிர்ச்சி! சட்டென்று மலை உச்சியிலிருந்து கீழே விழுந்து தானே மாண்டு போக துணிந்த அவளை கண்டு வியந்து பார்க்கும் வீராவின் கண்கள் - வசனங்களின்றி அவன் மனமுரைக்கும் சங்கதிகளை நமக்கு சொல்லும்! அந்த கதாபாத்திரத்தின் தன்மை - அதை சித்தரித்த விதம் பாராட்டத்தக்கது!


நண்பனுக்கு நண்பன் - வீரா.

காட்டி கொடுத்தும், கூட இருந்து குழி பறிக்கும் நரிகளுக்கு அவன் எமன்! அதை சித்தரிக்கும் காட்சிகளில் மெய்சிலிர்ப்பு!


ராகிணி

அழகி, வனப்புடையவள், கவர்ந்திழுக்கும் கண்கள், கிறங்கடிக்க செய்யும் உடல் வெட்டு. இத்தனையும் கண்டு, உயிர் பிழைத்து வந்த அந்த தேவதையை, அவ்வனாந்தர காட்டில், தனது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அந்த வனத்தில் ராகிணியை வீரா அவனது ஆசைகளுக்கேற்ப உபயோகித்திருக்கலாம். ஆனால் வீரா ராகிணியை பார்த்தது - ஒரு தைரியமான பெண்ணாக, உயர்ந்த மலை அளவு நெஞ்சுரம் கொண்டவள், அதனிடையே ஓடும் குளிர் நீரோடை போல் மென்மையான அன்புள்ளம் கொண்டவள். இதற்கெல்லாம் மேல், அவள் மாற்றான் மனைவி! அவளை கடத்தி கொண்டு வந்தது (நம் சென்னை தமிழில் சொல்ல வேண்டுமெனில், 'மஜாவிற்காக' அல்ல). தன் வீட்டு பெண்னை தூக்கி சென்று, மானபங்க படுத்திய அந்த கயவர் கூட்டத்திற்கு, அதன் தலைவனுக்கு, வீரா தான் அனுபவித்த வேதனையின் ஒரு சிறு பங்காவது உணர்த்த செய்த செயலே அது! உடலோடு உடல் உரச தருணங்கள் வந்தும் ராவணன், குணத்தில் ராமனாக திரையில் வடித்த நேர்த்தி அழகு!


நிஜ ராமாயணத்தில் உள்ள கருடன் வருகை, அனுமான் ராவணனை நேர்காணும் தருணம், அனுமான் சீதையை கண்டு ராமனின் வேதனை உரைக்கும் நொடி என்று பல காட்சிகள் மிக அழகாய் திரையில் பிரதிபலித்துள்ளார் மணி சார்.


வீரா, எஸ்.பி, இருவரும் சமமான பலம் பொருந்தியவர்கள். சமாதானம் பேச வந்த தன் சகோதரனை பிணமாய் திருப்பி அனுப்பிய எஸ்.பியை பழி வாங்க நடக்கும் மோதலின் போது பின்ணனியில் 'ரதமோடு ரதமும் எதிர்க்கவே!' என்ற வரிகள் கேட்கும் போது நிஜமாகவே புராணத்தில் வாழும் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையே நடந்த மாபெரும் போர்தான் நம் கண்கள் முன் விரியும்!


என்ன கதையின்னே புரியல!

“இது நக்சலைட் கதையா? வீரப்பன் கதையா? மாவோயிஸ்ட் கதையா?” என்றெல்லாம் கேள்விகள் பல தொடுத்தனர் சில நண்பர்கள். "சார்... நீங்களோ நானோ, துப்பாக்கி எடுக்குறோம்ன்னு வெச்சுக்குவோம். எந்த மாதிரி Situationல அப்படி ஒரு கட்டத்துக்கு போவோம்? சாப்பிட சாப்பாடில்ல, உடுக்க துணியில்ல, அடிப்படை வசதிகள் எதுவுமில்ல! இதை எல்லாத்தையும் சமாளிச்சு வர்றோம். அடுத்து நம்ம சுயத்தை தொட்டு விளையாடினா நாம என்ன பண்ணுவோம்? நம்ம சுயம் மட்டுமில்லாம நம்ம சுற்றத்தின் மேலேயும் கைவெச்சா என்ன பண்ணுவோம்? நான் சுட்டுதான் தீர்ப்பேன்! அந்த கட்டத்தில் மகாத்மாவா அகிம்சை வழி என்னால போக முடியாது! நீங்க எப்பிடி? அகிம்சைன்னு ஒரு சாதாரண மனுசன போல எதிரி துப்பாக்கி முன்னாடி போய் நிப்பீங்கலா? இது இந்த உலகத்துல காலம் காலமா நடந்திட்டு வர்ற விஷயம். இல்லல்ல விஷமம்! இப்ப கூட சத்தமில்லாம எங்கோ ஒரு கூட்டம், பலமில்லாம, உதவிக்கு கை கொடுக்க ஆளில்லாம, சின்ன விம்மல்களோட, சகல பலம் பொருந்திய கும்பலின் காலின் கீழே இறந்து போயிட்டு தான் இருக்காங்க சார்! Cuban Revolution, Russian Revolution, French Revolution, Indian Independence Struggle, Apartheid Movementன்னு வரலாற்றோட பக்கங்களில் இருக்கிற போராட்டங்கள் எல்லாம் இதனாலதான் சார்! ஒரு மனிதன் அல்லது ஒரு மனிதத்தின் சுயத்தை தொட்டு விளையாடும் ஓநாய் கூட்டத்தை எதிர்த்து தெறிக்கிற தீ ஜுவாலைதான் போராட்டம். இந்த போராட்டங்களோட தன்மை வழிகள், போராடிய விதங்கள் மாறலாமே தவிர அவைகளோட லட்சியம் ஒன்னேதான்!"


END CARD

தமிழில் இப்படி ஒரு சிறப்பான படம். காலனாக்கு கூட தேராத பல படங்கள் மத்தியில் வெளியாகியுள்ளது. இதற்கு பட்டு வர்ண கம்பளம் விரித்து, மலர் தூவி, மாலையிட்டு, விருதுகள் பல கொடுத்து மகிழ சொல்லவில்லை. அதை அதன் இயல்பு தன்மையோடு ரசித்து பார்த்துவிட்டு திரையரங்குகளிலிருந்து வெளியே வருவோமாக!

:-)

- பி சி பாலசுப்பிரமணியம்

Sunday, September 19, 2010

இது தான் முறை!

அதுவொரு இருண்ட பட்டறை

நானும் என் நண்பரும் உள்ளே நுழைந்தோம்

என் நண்பர் ஒரு திரைப்பட கலைஞர்

அதுதான் எங்கள் முதல் சந்திப்பு

ஏனோ பயம் அவர் கண்களில் நிறைந்திருந்தது!


அங்கே அந்த பட்டறையில்

ஒரு இரும்பு கம்பியை நெருப்பால் சுட்டெரித்தேன்

ரொம்ப நேரம் நெருப்பில் குளித்து கொண்டிருந்தது அது!


அதன் ஒரு பக்கம் நல்ல சூடு!

அந்த பக்கத்தை கையுறைகள் இட்டு நான் எடுத்துக் கொண்டேன்

மற்றொரு பக்கம் கைகளால் தொட முடியும், அளவான சூடு.


அந்த சூடான பக்கத்தை நான் ஏந்தி கொண்டு

மற்றொரு பக்கத்தை என் எதிரில் இருந்த நண்பரிடம் கொடுத்தேன்.

அவர் அதை எளிதாய் கையில் ஏந்திக் கொண்டார்

பயம் விலகி அவர் முகத்தில் புன்னகை.


அந்த இரும்பு கம்பி - விமர்சனம் (CRITICISM)

Saturday, September 18, 2010

இவர்கள்

ஒரு காலத்தில்

இவர்கள் கண்களில்

நான் மோசமானவன்.

இன்று

ஒன்று கூடி வாழ்த்துகின்றனர்!

நான் தான் நல்லவன்... சாதனையாளனென்று.

நாளை

இவர்கள்...

ஒதுங்கி போவாரோ? ஒத்துழைக்க வருவாரோ?

தெரியவில்லை!

இவர்களை நம்பி நானில்லை.

இவர்கள் வந்தாலும் சரி,

வராவிட்டாலும் சரி,

என் பயணம் தொடரும்.

என்னை எதற்காகவும் மாற்றாமல்

நான் நானாக இருப்பேன்.

'இவர்கள்' - என்னை ஒரு குலத்திற்குள் அடைக்க விரும்பும் கும்பல்.

- பி.சி.பாலாசுப்பிரமணியம்

இன்னைக்கு மண்ட காஞ்சு இதை வரைந்தேன்!

என் தளபதி பிறந்த தினம் இன்று! - RAmnath

Wednesday, September 15, 2010

பிரிவு

பிரிவு -

அதன் ஆனந்த தாண்டவம் காண்கிறேன்.

உயிரோடு கலந்தவள்

என் உலகமாய் நிலைத்திருப்பவள்

அவளை பிரியும் காலம் வருகிறது

இலையுதிர் காலத்தில்

மரத்தை விட்டு

நிலம் அடையும்

இலையினை போலானேன்!

அவள்,

அவள் புன்னகை,

பிடிவாதம்,

மழலைச் சிரிப்பு,

மகிழ்ச்சி களிப்பு,

அழுகை,

அரவணைப்பு,

அழகிய இதயம்,

விழி சிரிக்க வைக்கும்

அலைபேசி கொஞ்சல்கள்

விடிந்தும் தீரா

அனுதின கெஞ்சல்கள்!

இத்தனையும்

இழந்து செல்கிறேன்

இனியவள் உன் கரம் பற்ற! - வேண்டுமெனில்

இனி கண்டங்கள் பலவும் கடப்பேனடி!!

உனக்காக பெண்ணே!

உன் விழியினை என்றும் நான் கண்டு மகிழ...

என் குடில் அதிலே

எழில்மகள் நீ விளக்கேற்ற!

- பி.சி.பாலசுப்பிரமணியம்

இன்னைக்கு கணபதி கிளம்புறார்!

இது புதுசு கண்ணா புதுசு!

சமீபத்திய மகிழ்ச்சி! - A Memorable Treat with Guhan, Jeeva Sir, Chandraw Sir, Parthi :-)

திராவிட மாடல்!