Friday, October 19, 2018

ஈசனே...



Sabarimala Issue

சபரிமலை விவகாரத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் முகநூல் நண்பர்கள் பலரின் பதிவுகளையும் பார்க்கிறேன். அதில் அதிகம் முனைப்போடு முந்தியடித்து கருத்து சொல்பவர் பெரும்பாலும் இந்துமதத்தவர் அல்லாதோரும், இந்து மத நம்பிக்கையற்றவர்களும், கடவுள் நம்பிக்கையற்றவர்களுமே பார்க்க முடிகிறது. 
எனக்கு புரிந்தவரை அவர்கள் சொல்லவேண்டியது, ’ஆணோ பெண்ணோ கோவிலுக்கு போகாதோ, அது மூடநம்பிக்கை!’ என்பதே ஆகும்! ஆனால் அதை விடுத்து, ‘ஆம்! பெண்களும் கோவிலுக்கு செல்ல வேண்டும்! அதுவே சம உரிமை!’ என்பது அவர்கள் அடிப்படை கொள்கையிலிருந்து, agendaவிலிருந்து மாறுப்பட்டு இருக்கிறதோ என்கிற எண்ணம் தோன்றுகிறது.


மேலும் இந்த சம உரிமை, சமத்துவம் எல்லாம் நிலைநாட்ட இவர்கள் முறுக்கிக்கொண்டு நிற்பது இந்துமதத்திற்கு எதிராக மட்டுமே என்பது நிதர்சன உண்மை!


இவர்களை தவிர்த்து எல்லா விஷயத்தையும் entertainmentஆக மட்டுமே பார்க்கும் இளையோர் கூட்டம். நமக்கு விஷயம் தெரியவில்லை என்றால் அது மூடநம்பிக்கை, தேவையில்லாத சம்பிரதாயம், வேலையற்ற முன்னோரின் வெட்டி பழக்கவழக்கம் என்று உதாசினப்படுத்தி அதை அசிங்கப்படுத்துவது! கொஞ்சம் நேரம் ஒதுக்கி, ஏன் அந்த பழக்கவழக்கம் இருக்கிறது என்று ஆராய்வதில் சோம்பேறித்தனம். எல்லாமே instantஆன இவ்வுலகில், googleக்கும் wikipediaவுக்கும் சரணம் சொல்லுவோமே தவிர உண்மையை அறிந்து கொள்ள ஒரு அடி முன்வைக்க மாட்டோம்!


இந்து மதத்தின் பெரும்சாபமே, அதில் உள்ள பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்களின் நோக்கம் அறியாமல் இருப்பதே! அதை சொல்லித்தர வேண்டிய பெற்றோர்களுக்கும் விஷயம் தெரியாது! ஏனென்றால் அவர்கள் பெற்றோர்களுக்கு தெரிந்திருக்காது அல்லது சொல்லாது போயிருப்பார்கள்.


And இன்னொரு mindset தற்போது பரவலாக இருப்பதை பார்க்க முடிகிறது. ”Break the rules! போராடணும்! எதிர்த்து நிக்கணும்!”. ஆனால் விநோதம் என்னவென்றால் இதை எல்லாம் செய்ய களத்திற்கு செல்லும் கூட்டம் மிக குறைவுதான்! அவர்கள் வீரியமெல்லாம் சமூக வலைதளங்களோடு முடிந்துவிடுவதுதான் சோகம்!


எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக இந்திய ஊடகங்களும் தங்கள் பெண் நிருபர்களை போராட்ட களம் என்று தெரிந்தே சபரிமலைக்கு செய்தி சேகரித்து வருமாறு அனுப்பி வைக்கிறது. போராட்டமே பெண்கள் நுழையக்கூடாது என்பது தெரிந்திருந்தும்...
ஊடகங்களுக்கு எல்லாமே storyதான், நோக்கமெல்லாம் TRPதான்! Breaking News, Exclusive இல்லையென்றால் மூச்சிரைத்து போவார்கள். அவர்களுக்கு எது வியாபாரத்தை அதிகம் ஈட்டிகொடுக்குமோ அதையே பரப்புவார்கள்.


சபரிமலை விவகாரம் கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு மட்டுமல்ல கேரளத்து கம்யூனிஸ ஆட்சியின் கடைசி காலம் என்றே கருதுகிறேன். உச்சநீதிமன்றம் சொன்ன சொல்லை வேதவாக்காக கொண்டு செயல்படும் பினராய் விஜயன் சபரிமலைக்கு ஒரு நிலையும், முல்லை பெரியாறுக்கு ஒரு நிலையும் எடுப்பதுதான் அரசியல்! பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை சிதைப்பதில் காட்டும் வீராவேசம் அவருக்கே பாதகமாக மாறும்!


நீதிமன்ற தீர்ப்பு இருப்பினும், நான் ஆணித்தரமாக நம்புவது… மக்களை மிஞ்சிய சக்தி எதுவுமில்லை! இப்போராட்டத்தில் இந்து மதம் அல்லாத மற்ற மதத்தினர் சபரிமலை சம்பரதாயம் அறிந்து, தீர்ப்புக்கு எதிராக குரல் கொடுத்ததுதான் யதார்த்த இந்தியா!


பாய் டீக்கடைக்கு ஒரு ஐயப்ப பக்தர் போனால், அவர் விரதம் அறிந்து நடந்துகொள்வர் இங்குள்ள இஸ்லாமிய நண்பர்கள்!


இங்கு பிரிவினை உண்டாக்குவது பாஜக, ஆர்.எஸ்.எஸ் என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது!
பிரிவினையே இருக்கக்கூடாது என்று வலியுறுத்தும் கட்சிகள் தான் அதை முன்நின்று அரங்கேற்றுகின்றன!
சரி... அவர்கள் பிழைப்பும் நடந்தேற வேண்டுமல்லவா…


சபரிகிரிநாதா… அவர்களையும் மன்னித்து அருள்வாயாக!


சுவாமியே சரணம் ஐயப்பா!