புத்தகம் ஒருவரை பல்வேறு பரிணாமங்களில் புதுப்பிக்கும், புது சிந்தனையோட்டத்துள் ஆழ்த்தும், சமயத்தில் சரியானவற்றை ஞாபகப்படுத்தும், சில புத்தகங்கள் சக பயணியாய் நம் வாழ்க்கையின் இறுதிவரை பயணிக்கும். இன்னும் சில புத்தகங்கள் நம் வாழ்க்கையையே திருப்பிப் போடும்!
அப்படிப்பட்ட புத்தகத்தை செதுக்கிய சிற்பி என்றும் நமக்கு நெருக்கமானவராய் இருப்பார். தாய் தந்தை, குரு, இறைவனுக்கு பிறகு அவரும் நம்மை ஆட்கொண்டவராய் இருப்பார். நம் செயல்கள் அனைத்திலும் ஜொலிப்பார். அப்படிப்பட்ட ஒர் எழுத்தாளர் தான் - பாலகுமாரன். எழுத்துச் சித்தர் என்ற அடைமொழியிட்டு படைப்புலகம் அவரை அழைப்பதில் எந்தவொரு ஐயமும் வேண்டாம்! எழுத்தாலும் சிந்தனையாலும் வாழ்ந்த வாழ்வின்படியும் அவர் சித்தரே!
சமீப காலங்களில் அவரது புத்தகங்கள், கதைகள், உரையாடல்கள் தான், நெடும் கடும் இன்னல்மிகு வாழ்க்கை பயணத்தின் இடையே எனக்கு இளைப்பாறும் ஓர் மரநிழலாய் அமைந்திருக்கிறது. பெரும் ஞானியர் பற்றி, அவர்தம் வாழ்க்கை முறை, சித்தாந்தம் பற்றி நம்மை போன்ற எளிய மக்களுக்கு இயல்பாய் எடுத்து இயம்ப ஓர் ஞானியால் தான் முடியும்.
பாலகுமாரன் எனும் ஞானி இயற்றி, ரமணமகரிஷி, ஆதிசங்கரர், மஹா பெரியவா, யோகி ராம்சுரத்குமார் இவர்கள் வரிசையில் தற்போது ராகவேந்திர சுவாமிகள் பற்றி படித்தேன். அவர்தம் வாழ்க்கை பாதை வழி பயணிக்கும் பாக்கியம் கிட்டியது.
பிருந்தாவனம் எனும் புத்தகம்… பாடம்!
பாலகுமாரன் எனும் ஞானி இயற்றி, ரமணமகரிஷி, ஆதிசங்கரர், மஹா பெரியவா, யோகி ராம்சுரத்குமார் இவர்கள் வரிசையில் தற்போது ராகவேந்திர சுவாமிகள் பற்றி படித்தேன். அவர்தம் வாழ்க்கை பாதை வழி பயணிக்கும் பாக்கியம் கிட்டியது.
பிருந்தாவனம் எனும் புத்தகம்… பாடம்!
இப்புத்தகத்தின் முன்னுரையில் அதிதீவிர ராகவேந்திர சுவாமிகள் பக்தரான சூப்பர்ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் அவர்களை நினைவுக்கூர்ந்துள்ளார் பாலகுமாரன். உச்சநட்சத்திரமாக இருந்த காலத்தே, முட்புதர்களாய் எங்கும் நாதிக்கம் பரவி விரவி கிடந்த நேரத்தில்,ராகவேந்திர சுவாமிகள் வாழ்க்கை பற்றிய திரைப்படத்தில் நடித்து, அப்படிப்பட்ட மஹானை பட்டித்தொட்டி எங்கும் எடுத்துச் சென்ற பெருமை ரஜினிகாந்த் அவர்களுக்கே சேரும் என்று நன்றி பாராட்டியுள்ளார்.
பெரும் ஞானியரை உணர இன்னொரு ஞானியால் தான் முடியும் என்பது நிதர்சனம்.
வேங்கடநாதனாய் பிறந்து, வறுமையில் வாடி, வேத உபநிஷதங்களில் பண்டிதனாய் விளங்கி, குருவுக்கு நல்ல மாணவனாய் திகழ்ந்து, இளம்வயதில் துறவறம் பூண்டு, இஸ்லாமியர்கள் ஆதிக்கம் நிறைந்த அன்றைய பாரத மண்ணில் ஹிந்து மத கொள்கைகளை, சனாதன சிந்தனைகளை, வைணவ குளமதில் பூத்த துவைதத்தின் அருமை பெருமைகளை நாடெங்கும் பரவச்செய்தார். தனது பிறப்பு முதல் இறப்பு வரை, அளப்பரியா அன்பும் அற்புதங்களும் நிறைந்த மஹான் வாழ்க்கை படித்து உணர்வதே சிறப்பு!
No comments:
Post a Comment